விஜய் டிவி ஷோ-ல அவள் சொன்ன வார்த்தை.. விசேஷத்துல நடந்தது.. இதெல்லாம் தான் முதல் மனைவியை பிரிய காரணம்.. நடிகர் பப்லு Open Talk..!
தமிழில் 1971ம் ஆண்டு வெளியான நான்கு சுவர்கள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் பப்லு என்கிற பிரித்விராஜ். இந்த படத்தை தொடர்ந்து, நீதி, டாக்டர் சிவா, நாளை நமதே, பாரதவிலாஸ் போன்ற பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். நான் சிவப்பு மனிதன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமான இவர், அவள் வருவாளா, பயணம் போன்ற பல படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
தமிழ் மொழியை தவிர தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். திரைப்படங்கள் மட்டுமின்றி கோகுலத்தில் சீதை, அரசி, வாணி ராணி, மர்ம தேசம் போன்ற பல சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர். தற்போது சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘கண்ணான கண்ணே’ சீரியலில் நடித்து வருகிறார்.
சிறந்த நடிகர் என்பதை தாண்டி, ஒரு டான்சர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பப்லு 23 வயது பெண் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளதாக, வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் 1994ம் ஆண்டு, பீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு 25 வயதில் மகன் ஒருவரும் உள்ளார். இவர் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டவர்.
தன்னுடைய மகனை மிகவும் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இவர்கள் இன்னொரு குழந்தையை கூட பெற்றுக்கொள்ளவில்லை. எனினும் மகன் ஆட்டிசமால் பாதிக்கப்பட்டதால், சில வருடங்கள் மிகுந்த மனஉளைச்சலில் இருந்த பப்லு, திரையுலகில் இருந்தும் விலகி இருந்தார்.
தற்போது மீண்டும் சீரியல்களில் நடித்து வரும் பப்லு, கடந்த சில வருடங்களாக, மனைவி பீனாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்த நிலையில், மலேசியாவில் பப்லுவிக்கு தொழில் ரீதியாக சில உதவிகள் செய்த, பெண்ணுக்கும் இவருக்கும் இடையே மலர்ந்த காதல் தற்போது திருமணத்தில் முடித்துள்ளதாக தகவல் வெளியானது.
இவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் வயது வித்தியாசத்தை காட்டி பலரும் சமூக வலைதளத்தில் விமர்சித்து கலாய்த்து வந்தனர். இந்நிலையில், தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்ததற்கான காரணத்தை பப்லு பேட்டியில் கூறியுள்ளார். நானும் என்னுடைய முதல் மனைவியும் நண்பர்களாக இருக்கும் போது நன்றாக தான் இருந்தது. கணவன் மனைவியாக மாறிய பிறகு தான் எங்களுக்குள் பிரச்சனை தொடங்கியது.
மேலும், விஜய் டிவியில் சில வருடங்களுக்கு முன்பு கல்யாணம் பந்தல் என்ற ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதில் நானும் என்னுடைய மனைவியும் கலந்து கொண்டிருந்தோம். அப்போது தொகுப்பாளர் என்னுடைய மனைவியிடம், உங்களுடைய கணவரை ஹக் பண்ணுவதற்கு நீங்கள் சந்தோஷப்படுகிறீர்களா? என்று கேட்டதற்கு யார் இவனா? என்று கேட்டார். அது என்னை மிகவும் காயப்படுத்தி இருந்தது.
அதுமட்டுமில்லாமல் என்னுடைய முதல் மனைவியின் ரிலேஷன் பங்க்ஷன்க்கு போகணும் என்றால் கூட ஆட்டோவில் வாங்க கார் அனுப்ப முடியாது என்று கூறுவார். நான் ஏதாவது டிரஸ் போட்டு இது நல்லா இருக்கா என்று கேட்டால் கூட உனக்கு இது செட் ஆகவில்லை என்று ஒரே வாரத்தில் கிளம்பி போய்விடுவார். அது எனக்கு ஒரு மாதிரியாக இருக்கும்.
அதனால் எங்களுக்குள் அடிக்கடி சண்டை வரும். கோபத்தில் நானும் என்னுடைய முதல் மனைவியை அதிகமாக கெட்ட வார்த்தையில் பேசி திட்டுகிறேன். அதை பார்த்து என்னுடைய மகன் ரொம்பவே அப்செட் ஆகிவிடுவான். அதனால் தான் நான் வீட்டில் இருந்து கிளம்பி வாடகைக்கு வீடு எடுத்து இருந்தேன். எனக்கு மரியாதை கொஞ்சம் கூட இல்லாததால் தான் இப்படி ஒரு முடிவுக்கு எடுக்க காரணம் என்று கூறியிருந்தார்.