AK61ல் அஜித் உடன் முதல்முறையாக நடிக்கும் தமிழ் பட நடிகர்.. வெளிவந்த உறுதியான தகவல் !

Samuthirakani to join ak61 crew and cast information rumoured on social media

வலிமை திரைப்படத்தை தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகவிருக்கும் திரைப்படம் AK61. இப்படம் குறித்து பல விதமான தகவல் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. அதாவது, அஜித் இப்படத்தில் இரு வேடத்தில், ஹீரோ மற்றும் வில்லன் ரோலில் பல ஆண்டுகள் கழித்து நடிப்பதாக சொல்லப்படுகிறது.

இப்படத்தின் ப்ரீ-production வேலைகள் விரைவாக நடந்து வருகிறது. ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருவதாக தெரிகிறது.

Samuthirakani to join ak61 crew and cast information rumoured on social media

இப்படம் பிரபல வெப் சீரிஸ் ‘மணி ஹெய்ஸ்ட்’ போல வங்கி கொள்ளை சம்மந்தமாக இத்திரைக்கதை உருவாகவுள்ளதாக தகவல் வெளியானது.

இப்படத்தில் சண்டைக்காட்சிகள் என தனியே ஏதும் இல்லது ஹீரோக்கும், வில்லனுக்குமான டெக்னிக்கல் சண்டையாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

இதில் கதாநாயகியாக தபு, ராகுல் ப்ரீத் சிங் நடிப்பதாக தகவல்கள் உலா வந்தது.

தற்போது, பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் நாயகியாக ஒப்பந்தமாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.

மேலும், இப்படத்தில் ‘சர்பட்ட பரம்பரை’ படத்தில் வில்லனாக நடித்த ஜான் கொக்கன் ​​மற்றும் ராஜதந்திரம் படத்தின் ஹீரோ வீரா ஆகியோர் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தில் முதல் முறையாக அஜித்துடன் முன்னணி இயக்குனர் மற்றும் நடிகரான ஒருவர் தெரியவந்துள்ளது.

Samuthirakani to join ak61 crew and cast information rumoured on social media

சமுத்திரக்கனி அவர்கள் ஏற்கனவே நிறைய திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில், ஹீரோவாக, முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், AK61 படத்தில் அவர் இணைந்துள்ளதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.

Samuthirakani to join ak61 crew and cast information rumoured on social media

Share this post