உறவினர் திருமணத்தில் சேலையில் 'ரவுடி பேபி' பாடலுக்கு டான்ஸ் செய்த சாய் பல்லவி.. வைரலாகும் வீடியோ !

Sai pallavi dances in her relatives marriage function viral video

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ப்ரேமம் திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தவர் சாய் பல்லவி. மலர் டீச்சராக ரசிகர்கள் மனதில் நாற்காலி போட்டு அமர்ந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வந்தார்.

தெலுங்கில் பிடா, மிடில் கிளாஸ் அப்பாயி, ஷ்யாம் சிங்க ராய் போன்ற படங்களிலும், தமிழில் தியா, மாரி 2, NGK போன்ற திரைப்படங்களிலும், மலையாள மொழியில் ப்ரேமம், காளி, அதிரன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இதற்கு முன்னரே, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.

Sai pallavi dances in her relatives marriage function viral video

தென்னிந்திய திரையுலகத்தில் முன்னணி நடிகைகள் அந்தஸ்துக்கு உயர்ந்திருக்கும் சாய் பல்லவி, தற்போது இவர் கைவசம் விராட பருவம் திரைப்படம் மட்டுமே உள்ளது. புதிதாக பட வாய்ப்புகள் ஏற்காமல் இருந்து வருகிறார்.

இதன் காரணமாக அவருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும், அதனால் தான் அவர் புதிய பட வாய்ப்புகளை தவிர்த்து வருவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது.

இதற்கு விளக்கம் அளித்த சாய் பல்லவி ‘திருமணம் குறித்து பரவும் தகவல் உண்மையில்லை. நல்ல கதாபாத்திரத்திற்காகவும் கதைக்காகவும் காத்திருப்பதனால் அதிக படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை.

சாய் பல்லவி நடித்தால் நல்ல படமாகத் தான் இருக்கும் என ரசிகர்கள் நம்புகின்றனர். அதற்காகவே கதை தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறேன்” என கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்நிலையில், தற்போது சாய் பல்லவி தனது உறவினர்/நண்பர் திருமணத்தில் அங்கிருந்தவர்களுடன் சாய் பல்லவி டான்ஸ் செய்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதிலும், சேலையில் அவர் ஆடும் வீடியோ ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

Share this post