டான் படத்தை ஒத்த போட்டோவில் விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்..! இவங்க 2 பெரும் கஷ்டபட்டு வந்தவங்க..! உன்ன மாதிரியா.. கோபத்தில் ரசிகர்கள்..!

Sivakrthikeyan Don Movie Negative Comment Blue Satai Maran

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா அருள்மோகன், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் நடித்த டான் படம் இன்று ரிலீஸாகியிருக்கிறது. படம் பார்த்தவர்கள் அது குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ரசிகர்களுக்கு டான் மிகவும் பிடித்திருக்கிறது.படத்திற்கு நல்ல விமர்சனங்கள் தான் வந்துகொண்டிருக்கின்றன, ஆனால் ஒருவர் மட்டும் படத்தை மோசமாக தாக்கியிருக்கிறார்.

இந்நிலையில் சினிமா விமர்சகரும், இயக்குநருமான ப்ளூ சட்டை மாறன் டான் பற்றி ட்வீட் போட்டிருக்கிறார்.

Sivakrthikeyan Don Movie Negative Comment Blue Satai Maran

சிவகார்த்திகேயன் தன் கடின உழைப்பால் முன்னுக்கு வந்தவர். அவரை பற்றி இப்படி தரக்குறைவாக விமர்சிக்க வேண்டாம் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். நீங்கள் இயக்கிய anti indian படத்திற்கு வந்தவர்கள் தூங்கியபோது எடுத்த புகைப்படமா இது என்று சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

படம் பார்க்க தியேட்டருக்கு சென்றவர்கள் தூங்குவது போன்ற புகைப்படத்தை மட்டும் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ப்ளூ சட்டை மாறன். அவர் படத்தின் பெயரை குறிப்பிடாவிட்டாலும் டானை தான் கிண்டல் செய்திருக்கிறார் என்பது தெரிகிறது. இதை பார்த்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர்.

Share this post