சிகிச்சைக்கு மத்தியில் சமந்தா எடுத்த ரிஸ்க்.. வெளியான போட்டோ.. அதிர்ச்சியில் ரசிகர்கள் ..!

samantha wears 30kg weigh saree for shakuntalam movie shoot

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. கவுதம் மேனனின் Ye Maaya Chesave என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, நீதானே எந்தன் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, தெறி, அஞ்சான், 24, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.

samantha wears 30kg weigh saree for shakuntalam movie shoot

தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் முன்னணி தெலுங்கு நடிகர்களுடனும் நடித்து வரும் இவர், பிரபல நடிகையாக வலம் வருகிறார். தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த சமந்தா, நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017ல் திருமணம் செய்து கொண்டார். ஒருக்கட்டத்தில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து நாக சைதன்யாவை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

samantha wears 30kg weigh saree for shakuntalam movie shoot

மையோசிட்டிஸ் என்ற பிரச்சனையால் அவதிப்பட்டு வரும் சமந்தா, தற்போது அதற்கு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். சிகிச்சையின் மூலம் அவரது உடல்நிலை தற்போது தேறி வருவதாக கூறப்படுகிறது. தெலுங்கில் ‘ஷகுந்தலம்’, ‘குஷி’ படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

samantha wears 30kg weigh saree for shakuntalam movie shoot

புராண கதையாக சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள சகுந்தலம் திரைப்படம் வரும் பிப்ரவரி 17ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் டீசரில், சமந்தாவின் தோற்றம் மற்றும் நடிப்பு, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது. இந்நிலையில், இப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.

samantha wears 30kg weigh saree for shakuntalam movie shoot

வசுந்தரா டைமண்ட் நிறுவனம் உருவாக்கிய 3 கோடி மதிப்புள்ள ஆபரணங்களை சமந்தா ‘சகுந்தலம்’ படத்தில் அணிந்து நடித்திருந்ததாகவும், உயர் ரக கற்கள் பதிக்கப்பட்ட சுமார் 30 கிலோ புடவை அணிந்து ஒரு வாரம் சமந்தா நடித்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியாத நிலையில், இது குறித்த புகைப்படம் ஒன்றும் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது.

samantha wears 30kg weigh saree for shakuntalam movie shoot

Share this post