'மார்பகத்தைப் பெரிதாக்க சொன்னார்' - இயக்குநர் பற்றி உண்மையை சொன்ன சமீரா ரெட்டி
ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழியில் பல திரைப்படங்களில் நடித்த பின்னர், தமிழில் வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சமீரா ரெட்டி. முதல் படத்திலேயே சூர்யா நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் செம அழகாக தோன்றிய இவர், ரசிகர்கள் கனவுக்கன்னியாக இருந்தார்.
அதன் பின்னர், அசல், நடுநிசி நாய்கள், வெடி, வேட்டை உள்ளிட்ட வெகு சில தமிழ் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மனதில் நீங்க இடத்தை பிடித்துள்ளார். மலையாளம், பெங்காலி, ஹிந்தி, தெலுங்கு, கன்னட என திரைப்படங்களில் நடித்துள்ளார். சில மியூசிக் ஆல்பம்களிலும் நடித்துள்ளார்.
2014ம் ஆண்டு, அக்ஷய் என்னும் பிரபல தொழிலதிபரை திருமணம் செய்தார். குழந்தைகள் குடும்பம் என செட்டில் ஆன சமீரா, சினிமாவிற்கு டாடா காட்டிவிட்டார். கொஞ்சம் உடல் எடை கூடி ஆளே மாறி போன நிலையில், சமூக வலைத்தளங்களில் இது குறித்த கருத்துக்களை பதிவிட்டு வந்தார்.
தற்போது வெயிட் லாஸ் செய்து வரும் சமீரா, மாடர்ன் மற்றும் பிகினி உடைகளில் போட்டோஸ் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், நடிகை சமீரா ரெட்டி கூறிய தகவல் ஒன்று காட்டுத்தீ போல இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன் மூக்கு, வாய் என நடிகைகள் தங்களுடைய அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டிந்த நேரம் அது.
அந்த சமயம் தான் நடிகை சமீராவும் திரைப்படத்துறைக்குள் அடியெடுத்து வைத்தார். அப்போது, திரைப்பட ஆடிஷனில் கலந்து கொண்டபோது பாலிவுட் இயக்குநர் ஒருவர் சமீராவை மார்பை அழகாகவும், பெரியதாகவும் காட்ட அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அதற்கு சமீரா மறுப்பு தெரிவித்து மாறாக, மார்பை பெரியதாக காட்ட அறுவை சிகிச்சை செய்யாமல் வேறு சில முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
இருப்பினும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் அவரை வலியுறுத்தியுள்ளனர். எவ்வளவுதான் சொல்லியும் கடவுள் அருளால் தான் அப்படி செய்யவில்லை எனக் கூறியுள்ளார். ஆனாலும் மார்பை பெரியதாக காட்ட தான் எடுத்த சிறு முயற்சிகளை கூட செய்யாமல் இருந்திருக்கலாம் என நினைப்பதாகவும் சமீரா கூறியுள்ளார்.