நடக்க கூட முடியாத நிலையில் சமந்தா.. அதிர்ச்சியளிக்கும் அவரது தற்போதைய உடல்நிலை
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. கவுதம் மேனனின் Ye Maaya Chesave என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, நீதானே எந்தன் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, தெறி, அஞ்சான், 24, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.
தெலுங்கில், ஓ பேபி, ரங்கஸ்தலம், மகாநதி போன்ற பல வெற்றி திரைப்படங்களில் முன்னணி தெலுங்கு நடிகர்களுடனும் நடித்துள்ளார். மையோசிட்டிஸ் பிரச்சனைக்கு சிகிச்சை எடுத்து கொண்டே யசோதா டப்பிங் போன்ற பணிகளையும் ப்ரோமோஷன் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். இதுகுறித்து சமந்தா வெளியிட்ட புகைப்படம் வைரலானது.
நடிகை சமந்தா நடிப்பில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ள திரைப்படம் யசோதா. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் வாடகைத் தாயாக நடித்துள்ளார் சமந்தா. ஹரி மற்றும் ஹரீஷ் ஆகியோர் இணைந்து இயக்கி உள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்து உள்ளார்.
சமந்தா உடன் நடிகை வரலட்சுமி சரத்குமாரும் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் ரிலீசாகி உள்ளது. சமூக வலைதளங்களில் தொடர்ந்து பாசிடிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. தற்போது மயோசிடிஸ் என்கிற அரியவகை நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் நடிகை சமந்தாவுக்கு, இப்படத்தின் வெற்றி புத்துணர்ச்சியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில், ஒரு கையில் ஊசியுடன் சமந்தா ஒர்க் அவுட் செய்யும் புகைப்படத்தையும் வெளியிட்டார். இதனை பார்த்து ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வந்தனர். இந்நிலையில், தற்போது நடிகை சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெலுங்கு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அவருக்கு உடல்நிலை மோசமடைந்ததால் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக் கூறப்படுகிறது. இருப்பினும் சமந்தா தரப்பில் இருந்து இதுகுறித்த எந்தவித தகவலும் வெளியிடப்படவில்லை. இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் அவர் விரைவில் நலம்பெற வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்னொரு அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. அவர் வீட்டில் தற்போது நலமுடன் ஒய்வெடுத்து வருதாக சொல்லப்படுகிறது. மேலும், தற்போது சமந்தாவின் உடல்நிலை நடக்க முடியாத அளவில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவரால் சிறிது தூரம் கூட நடக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக மூத்த பத்திரிக்கையாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.