Viral Video: மருமகள் நயன்தாரா குறித்து முதன்முறையாக மனம்திறந்து பேசிய விக்னேஷ் சிவன் தாயார்!
கேரளா மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா, 2004ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, அடுத்தப்படமே சூப்பர்ஸ்டார் ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். இப்படத்தில் ஹோம்லியான லுக்கில் சில கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.
கஜினி, சிவகாசி, வல்லவன் போன்ற போன்ற படங்களில் சூர்யா, விஜய், சிம்பு போன்ற தமிழ் டாப் நடிகர்களுடன் நடித்தார். கடந்த சுமார் 20 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார்.
கோலமாவு கோகிலா, டோரா, கொலையுதிர் காலம் போன்ற படங்களில் நடித்து தனக்கென இடத்தை பிடித்தார். இதன் நடுவே, நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததன் மூலம் அப்படத்தின் இயக்குனர் ஆன, விக்னேஷ் சிவன் உடன் காதல் ஏற்பட்டு 7 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்தனர்.
மகாபலிபுரத்தில் கடந்த ஜுன் 9ம் தேதி நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, டபுள் ட்ரீட்டாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர், வாடகை தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தைகளை விக்கி - நயன் தம்பதி பெற்றெடுத்தனர். சரியாக விதிமுறையை கடைபிடிக்கவில்லை என்று சர்ச்சை எழவே, தாங்கள் 2016ம் ஆண்டே பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும், 2021ம் ஆண்டு வாடகை தாய் முறையில் குழந்தை பெற்றெடுக்கும் வேலையை தொடங்கியதாகவும் சாட்சிகளை விசாரணையில் சமர்ப்பித்தனர்.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தனது 38வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், திரையுலக பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை வாழ்த்து மழை பொழிந்து வந்தனர். மேலும், திருமணம் ஆகி குழந்தை பெற்று இவர் கொண்டாடும் முதல் பிறந்த நாள் என்பதால், நயன்தாரா கணவர் மற்றும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சியான பதிவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தார்.
இயக்குனர் விக்னேஷ் சிவனின் தாயார் மீனாகுமாரி தமிழ்நாடு காவல்துறையில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றியவர். தனது தாயின் ரியல் கேரக்டரை தான் இயக்குனர் விக்னேஷ் சிவன் தான் இயக்கிய நானும் ரவுடி தான் படத்தில் இடம்பெறும் ராதிகா கதாபாத்திரமாக பயன்படுத்தி இருப்பார். அந்த அளவு பாசமான தாயாக இருந்து வரும் மீனாகுமாரி, தனது மருமகள் நயன்தாரா, குறித்து முதன்முறையாக மனம்திறந்து பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது : “நயன்தாரா வீட்டில் 4 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் என மொத்தம் 8 பேர் பணியாற்றி வருகின்றனர். அதில் ஒரு பணிப்பெண் மட்டும் ஒருநாள் சோகமாக இருந்ததை கவனித்த நயன்தாரா, அவரிடம் என்ன பிரச்சனை என விசாரித்தார். அப்போது அந்த பெண் தனக்கு 4 லட்சம் ரூபாய் கடன் இருப்பதை கூறினார். உடனடியாக 4 லட்சத்தைக் கொடுத்து கடனை அடைக்குமாறு சொன்னார் நயன்தாரா. இதையெல்லாம் நான் அருகிலிருந்து பார்த்துக் கொண்டு தான் இருந்தேன். அவர் நடிகை தானே, கொடுக்கலாம் என நினைக்கலாம்.
ஆனால் அப்படி கொடுப்பதற்கு ஒரு மனசு வேண்டும். அந்த பெண்ணும் நேர்மையாக உழைச்சிருக்காங்க. நயன்தாராவின் அம்மா கேரளாவில் இருந்து வந்தபோது கூட அந்த பணிப்பெண்ணுக்கு தங்க வளையல் போட்டாங்க. நயன்தாரா வசிக்கும் குடியிருப்பை சுற்றி கேமரா இருக்கிறது. நயன்தாராவிடம் கேட்காமல் அந்த பெண் எதையும் செய்ய மாட்டார். யாரா இருந்தாலும் நம்பிக்கையா இருந்தா நல்லது கெட்டதை அவங்க பார்த்துப்பாங்க” என தனது மருமகள் குறித்து மனம்திறந்து பேசியுள்ளார் விக்னேஷ் சிவனின் தாயார்.