Myositis நோயால் கண்ணில் பாதிப்பு..? Flash போட்டவுடன் கண்களை மூடிக்கொண்ட சமந்தா.. Viral Video..!
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. கவுதம் மேனனின் Ye Maaya Chesave என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, நீதானே எந்தன் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, தெறி, 24, அஞ்சான், மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் முன்னணி தெலுங்கு நடிகர்களுடனும் நடித்து வரும் இவர், பிரபல நடிகையாக வலம் வருகிறார். தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த சமந்தா, நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017ல் திருமணம் செய்து கொண்டார். ஒருக்கட்டத்தில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து நாக சைதன்யாவை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
தற்போது சாகுந்தலம் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள இவர், அதற்கான ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதற்கு நடுவே, மையோசிட்டிஸ் என்ற பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த சமந்தா, தற்போது அதற்கு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். அவரது உடல்நிலை தற்போது தேறி வருவதாக கூறப்படுகிறது.
அவர் புதிய படங்களில் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை என்றும் ஏற்கனவே ஒப்பந்தித்த படங்களை மட்டும் முடித்து விட்டு சினிமாவுக்கு ஒரு நீண்ட இடைவெளி விட திட்டமிட்டிருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
அந்த வகையில், சமீபத்தில் நடைபெற்ற ‘சாகுந்தலம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் சமந்தா கலந்துகொண்டார். அப்போது புகைப்பட கலைஞர்கள் சமந்தாவை புகைப்படம் எடுக்க முயன்ற போது flash போடாமல் புகைப்படம் எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், அதனை கேட்டகாமல் சமந்தாவை வளைத்து வளைத்து போட்டோ எடுத்தனர். இதனால் தனது கண்களை கையில் வைத்து மறைத்து சமந்தா சமாளித்துக்கொண்டார்.
South superstar @Samanthaprabhu2 craze is massive in Bollywood 🥳🔥
— SamAnu🦋{ShaakuntalamOnApril14th 🦢} (@SamzCraziestFan) April 6, 2023
Queen in Mumbai for #Shaakuntalam promotions 😎❤️🔥#ShaakuntalamIn3D#ShaakuntalamOnApril14 #Samantha #SamanthaRuthPrabhu pic.twitter.com/w2lm0lWvvT