துணிவு படத்துல Accident'லா நடிச்சுட்டேன்... புது படத்தின் பூஜையில் அமீர் பேச்சால் கோபத்தில் ரசிகர்கள்..!

amir talk about thunivu movie acting getting viral on social media

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 மூலம் பிரபலம் அடைந்தவர்கள் அமீர் - பாவனி. நிகழ்ச்சியில் இவர்கள் செய்த விஷயங்கள் இவர்களை காதலர்கள் என கிசுகிசுக்கும் அளவிற்கு மாறிவிட்டது. ரெட்டை வால் குருவி, பாசமலர் போன்ற சீரியல் தொடர்களில் நடித்துள்ள பாவனி, சின்ன தம்பி சீரியல் தொடர் மூலம் பிரபலம் ஆகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்.

amir talk about thunivu movie acting getting viral on social media

சீரியல் தொடர்கள் மட்டுமல்லாது சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கு சீரியல் நடிகர் பிரதீப் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால், பிரதீப் எதிர்பாராத விதத்தில் தற்கொலை செய்து கொண்டது இவரை பெரிதும் பாதித்தது.

amir talk about thunivu movie acting getting viral on social media

அந்த சங்கடத்தில் இருந்து மீண்டு வந்து சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் கம் பேக் கொடுத்து வந்தார் பாவனி. அப்படி இவர் தன்னை நிரூபிக்க பங்கேற்ற ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ் சீசன் 5. இதில் பங்கேற்ற சக போட்டியாளரான அமீருடன் பாவனி காதலில் இருப்பதாக தகவல்கள் உலா வருகிறது.

amir talk about thunivu movie acting getting viral on social media

நிகழ்ச்சியின் போதே காதல் பேச்சுக்கள் அதிகம் வெளியான நிலையில், தற்போது இருவரும் ஜோடியாக வெளியே செல்வது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது என இருந்து வருகின்றனர். அமீர் உங்களில் யார் அடுத்த பிரபு தேவா, கிங்ஸ் ஆப் டான்ஸ் போன்ற பிரபல நிகழ்ச்சிகள் மூலம் நடன இயக்குனராக சின்னத்திரையில் வலம் வருபவர்.

amir talk about thunivu movie acting getting viral on social media

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, அவ்வப்போது ஒன்றாக சுற்றி வரும் இந்த ஜோடியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆவது வழக்கம். பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 நடன நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.

amir talk about thunivu movie acting getting viral on social media

இந்நிகழ்ச்சியில், அமீர் - பாவனி இருவரும் வெளியே செல்வது, புகைப்படங்கள் எடுத்து பதிவிடுவது என தங்கள் காதலை மறைமுகமாக காட்டி வந்தனர். சமீபத்தில், அமீருடனான காதலை பாவனி ரெட்டியும் உறுதி செய்ய விரைவில் திருமணம் என அதிகாரபூர்வமாக இருவரும் தெரிவித்து விட்டனர்.

amir talk about thunivu movie acting getting viral on social media

தற்போது அஜித்குமார் நடிக்கும் துணிவு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர்கள் இருவரும் நடித்திருந்தனர். இந்நிலையில், அமீர் மற்றும் பாவனி இரண்டு பேரும் சேர்ந்து ஒரு திரைப்படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை அமீரே இயக்கவும் உள்ளார். இப்படத்திற்கு சபீர் இசையமைக்கிறார். மன்சூர் அலிகான், காயத்ரி ஜெயராம், சுரேஷ் சக்ரவர்த்தி, சாதனா, விடிவி கணேஷ், அலீனா போன்றோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.

amir talk about thunivu movie acting getting viral on social media

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை சமீபத்தி நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் பேசிய அமீர் ‘நான் இந்த படத்தின் கதையை சொல்லும் போது நீங்களே டைரக்ட் பண்றீங்களானு தான் எல்லாரும் கேட்டாங்க. எனக்கு ஒரு படத்தை எல்லாரும் வேண்டும், இயக்குனர் ஆக வேண்டும் என்பது தான் ஆசை. எதிர்ச்சியாக துணிவு படத்துல ஆக்சிடெண்டலா நடிச்சிட்டேன். எனவே, மீண்டும் டைரக்டர் ஆக வேண்டும் என்று தான் இந்த எண்ணம் வந்தது’ என்று கூறியுள்ளார். அமீரின் இந்த பேச்சு அஜித் ரசிகர்கள் பலரை கோபத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

amir talk about thunivu movie acting getting viral on social media

துணிவு படம் வெளியான போதே நெட்டிசன்கள் “நீங்க படத்தில் வந்ததே இரண்டு நிமிடம் தான். அதற்கு எதுக்கு ஓவர் பில்டப். என்று இருவரையும் கேலி செய்யும் பில்டப். ட்ரோல் செய்தனர். இதற்க்கு பதில் அளித்த அமீர் ‘அஜித் அவர்களுடன் நடிக்கிறோம் என்றதில் ஆனந்தத்தில் எந்த படம், எந்த கதை, என்ன கதாபாத்திரம் என்று கூட கேட்கவில்லை. படத்தில் எவ்வளவு நேரம் இருந்தோம் என்பதை விட அஜித் எங்களுடன் படத்திற்கு பிறகு மூன்று மணிநேரம் எங்களுக்கு அறிவுரை கூறினார். அதைத்தான் பெரிய விஷயம் தான் என்று நினைக்கிறோம்’ என்று கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share this post