வெற்றிமாறன் இப்படியா..? சத்தியமா நம்ப முடில..!

chetan reveals about vetrimaran and viduthalai shooting spot

தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் நடிகை வெற்றிமாறன். தனது ஒவ்வொரு படத்திலும் மிக கவனம் செலுத்தி இவர் எடுப்பதை பார்த்து நிறைய சினிமா தொழில் நுட்ப துறையினரும் ஆச்சர்யமடைந்துள்ளனர். இவர் இயக்கத்தில் வெளியான பொல்லாதவன் திரைப்படம் இவருக்கு பெரும் வெற்றி படமாக அமைந்து, தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்தது.

chetan reveals about vetrimaran and viduthalai shooting spot

அதனைத் தொடர்ந்து, ஆடுகளம் மற்றும் வடசென்னை போன்ற படங்கள் பிளாக்பஸ்டர் திரைப்படங்களாக அமைந்தது. முதல் படம் முதலே வெற்றி தர தொடங்கிய இந்த கூட்டணி, பொல்லாதவன் தொடங்கி அசுரன் வரை மெகா ஹிட் திரைப்படங்களை தந்து வருகிறது.

chetan reveals about vetrimaran and viduthalai shooting spot

சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவரும் திரைப்படம் விடுதலை. இத்திரைக்கதை பிரபல எழுத்தாளர் ஜெய மோகன் அவர்களின் துணைவன் என்னும் சிறுகதையில் இருந்து எடுக்கப்பட்டது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சூரி, விஜய் சேதுபதி, கவுதம் மேனன், பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

chetan reveals about vetrimaran and viduthalai shooting spot

இத்திரைப்படத்தில் மிக கொடூரமான காவல் அதிகாரியாக சேத்தன் நடித்திருந்தார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட இவர், “விடுதலை” படப்பிடிப்பில் வெற்றிமாறன் நடந்துகொண்டது குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார். அதாவது ஒரு காட்சியில் சேத்தனின் நடிப்பு வெற்றிமாறனுக்கு திருப்தியளிக்கவில்லையாம்.

chetan reveals about vetrimaran and viduthalai shooting spot

ஆதலால் வெற்றிமாறன் சேத்தனிடம் எப்படி இந்த காட்சியில் நடிக்க வேண்டும் என தெளிவுப்படுத்தினாராம். அதன் பின் சேத்தன் இரவு முழுவதும் அந்த காட்சியில் எப்படி நடிக்க வேண்டும் என்று தனக்கு தானே பயிற்சி எடுத்துக்கொண்டு வந்தாராம். அந்த காட்சி படமாக்கப்பட்டு முடிந்தபிறகு கட் என்று சொல்லிவிட்டு எதுவுமே சொல்லவில்லையாம் வெற்றிமாறன்.

chetan reveals about vetrimaran and viduthalai shooting spot

அப்போது சேத்தன் வெற்றிமாறனிடம் சென்று, “சார் நீங்க சொன்ன மாதிரி நான் கரெக்ட்டா நடிச்சிருக்கேனா? எதுவுமே சொல்லமாட்டிக்கீங்களே” என கேட்டிருக்கிறார். உடனே வெற்றிமாறன், “சாரி சாரி, எனக்கு இப்படி ஒரு பழக்கமே வரமாட்டிகுது. தனுஷ் கூட அடிக்கடி கூறுவார். என்ன சார் ஒரு ‘Good’ன்னு கூட சொல்லமாட்டிக்கீங்களேன்னு. சத்தியமா எனக்கு எனக்கு அது வரமாட்டிக்கு, ஏன்னு தெரில” என கூறினாராம்.

Share this post