இப்படி தான் மரியாதை இல்லாம பேசுவியா.. வெற்றிமாறன் குறித்து பிரதீப் பதிவிட்ட ட்வீட்டால் கிளம்பிய சர்ச்சை..!

pradeep ranganathan tweet on vetrimaran viduthalai movie and review getting viral

கோமாளி படத்தின் வெற்றியை தொடர்ந்து, பிரதீப் இயக்கம் மற்றும் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் லவ் டுடே. ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்து யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். பிரதீப்புக்கு ஜோடியாக இவானா நடித்திருந்தார்.

pradeep ranganathan tweet on vetrimaran viduthalai movie and review getting viral

சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர். திரையரங்குகளில் வெளியாகி பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று, நல்ல பொழுதுபோக்கு படமாக மட்டுமல்லாது இந்த காலத்து காதலை பிரதிபலிப்பதாக ரசிகர்கள் கொண்டாடி இருந்தனர்.

pradeep ranganathan tweet on vetrimaran viduthalai movie and review getting viral

காதல் ஜோடி ஒருவருக்கு ஒருவர் போனை மாற்றிக்கொண்ட பின் நடக்கும் மோதல்களை நகைச்சுவை கலந்து சொல்லியுள்ள படம் தான் லவ் டுடே. முதல் பாதி முழுக்க காமெடி, இரண்டாம் பாதி முழுக்க எமோஷன் என பக்கா கமர்சியல் பேக்கேஜ் ஆக இப்படத்தை இயக்கியிருந்தார் பிரதீப்.

pradeep ranganathan tweet on vetrimaran viduthalai movie and review getting viral

இன்றைய கால இளைஞர்களின் வாழ்வோடு ஒத்துபோகக்கூடிய கதை என்பதால் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், பிரதீப் ரங்கநாதன் தற்போது விடுதலை திரைப்படம் குறித்து பதிவிட்டுள்ள ட்வீட் சர்ச்சையாகி வருகிறது. அந்த ட்வீட்டில், விடுதலை திரைப்படம் பிரமாதமாக இருந்ததாகவும், இப்படத்தின் இயக்குனர் வெற்றிமாறனுக்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள் என பதிவிட்டு இருந்தார்.

pradeep ranganathan tweet on vetrimaran viduthalai movie and review getting viral

இந்த பதிவில் இயக்குனர் வெற்றிமாறன் என்று மட்டும் குறிப்பிட்டிருந்ததை சுட்டிக்காட்டி வெற்றிமாறனை சார்னு கூப்பிட மாட்டியா.. மரியாதை கொடுக்க மாட்டியா என கேள்வி எழுப்பி வருகின்றனர். வெற்றிமாறன் சீனியர் இயக்குனர் மட்டுமல்ல இந்திய சினிமாவின் சிறந்த இயக்குனரும் கூட அவரை சார்னு தான் கூப்பிடனும் என ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

pradeep ranganathan tweet on vetrimaran viduthalai movie and review getting viral

Share this post