ஹீரோவாகும் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்..? ஹீரோயின் இவரா..? இணையத்தில் லீக்கான தகவல்..!
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளி வரும் திரைப்படங்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இவரது மகன் ஜேசன் சஞ்சய் குறித்து அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பேசப்படுவது வழக்கம்.
விஜய் அவர்களின் மகன் ஜேசன் சஞ்சய் கனடாவில் சினிமா சம்பந்தப்பட்ட படிப்பை அண்மையில் படித்து முடித்தார். இவர் குழந்தை நட்சத்திரமாக, போக்கிரி படத்தில் ஒரு பாடலில், வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலில் என தோன்றியிருப்பார்.
தற்போது படிப்பை முடித்து திரும்பியுள்ள அவர், இதையடுத்து சினிமாவில் கவனம் செலுத்த உள்ளதாக பரவலாக பேசப்பட்டது. முதலில் அவர் இயக்குனராக ஆசைப்படுவதாகவும், படம் இயக்கும் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டது.
பின்னர் அவரை மிகப்பெரிய நடிகனாக்க விஜய் ஆசைப்படுவதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த செய்திகளுக்கு ஒரு நேர்காணலில் முற்றுப்புள்ளி வைத்த விஜய், சஞ்சய் தற்போதைக்கு சினிமா பக்கம் வர வாய்ப்பில்லை என கூறினார்.
மேலும் சஞ்சய்க்காக பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் சூப்பர் கதை ஒன்றை சொன்னதாகவும், ஆனால் சஞ்சய் தற்போது நடிக்க ஆர்வம் இல்லை என கூறி நடிக்க மறுத்துவிட்டதாகவும் விஜய் அந்த பேட்டியில் கூறினார்.
இந்நிலையில், விஜய்யின் மகன் சஞ்சய்க்கு ஹீரோவாக நடிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு தேடி வந்துள்ளது. தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் உப்பெண்ணா. இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் விஜய்யின் மகன் சஞ்சய்யை நடிக்க வைக்க அவரை அணுகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உப்பெண்ணா படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை கீர்த்தி ஷெட்டியே தமிழ் ரீமேக்கிலும் நடிப்பார் என கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை. இப்படத்தின் வாய்ப்பை சஞ்சய் ஏற்று தமிழ் சினிமாவில் ஹீரோவாக என்ட்ரி கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.