நாக சைதன்யாவுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை பதிவிட்டு ஷாக் கொடுத்த சமந்தா.. மீண்டும் இணைகிறார்களா?

samantha unarchived her close photo with nagachaitanya in her timeline

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. கவுதம் மேனனின் Ye Maaya Chesave என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, நீதானே எந்தன் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, தெறி, அஞ்சான், 24, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.

தெலுங்கில், ஓ பேபி, ரங்கஸ்தலம், மகாநதி போன்ற பல வெற்றி திரைப்படங்களில் முன்னணி தெலுங்கு நடிகர்களுடனும் நடித்துள்ளார்.

samantha unarchived her close photo with nagachaitanya in her timeline

ஒரு சில படங்களில் ஒன்றாக நடித்ததன் மூலம் ஏற்பட்ட காதலால் நாகார்ஜுனா மற்றும் அமலா அவர்களின் மூத்த மகனான நடிகர் நாகசைதன்யா அவர்களை திருமணம் செய்து கொண்டார்.

2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்கள், ஸ்வீட் ஜோடியாக வலம் வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக சில நாட்களுக்கு முன் இருவரும் சுமூகமாக பிரிந்து விட்டனர். விவாகரத்திற்கு பின்னர், திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ள சமந்தாவின் ஊ சொல்றியா மாமா பாடல் செம ஹிட் அடித்தது. மேலும், திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

நாக சைதன்யாவும் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வந்த நிலையில், நடிகர் நாக சைதன்யா இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருவதாக தகவல் வெளியானது.

இப்படி நாக சைதன்யாவின் இரண்டாவது திருமணம் குறித்த தகவல் ஒருபக்கம் பரவ, மறுபக்கம் நடிகை சமந்தா செய்த செயல் சமூக வலைத்தளங்களில் பேச்சு பொருளாக மாறியுள்ளது. இன்ஸ்டாகிராமில் வைத்திருந்த புகைப்படம் ஒன்றை தற்போது சமந்தா மீண்டும் அன் ஆர்சிவ் செய்திருக்கிறார்.

samantha unarchived her close photo with nagachaitanya in her timeline

அந்த பதிவு நாக சைதன்யாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து கடந்த 2017ம் ஆண்டு நாகசைதன்யாவுக்கு முத்தம் கொடுத்தபடி சமந்தா போஸ் கொடுத்துள்ளார்.

பிரிந்து வாழ்ந்து வரும் சமயம், சமந்தா இப்படி ஒரு வேலை செய்துள்ளதால் இருவரும் மீண்டும் இணைய உள்ளார்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். சிலர் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

samantha unarchived her close photo with nagachaitanya in her timeline

Share this post