Viral Video: விழாவில் ராஷ்மிகாவை அவமானப்படுத்திய பிரபல முன்னணி நடிகை.. இப்படி செஞ்சிருக்க கூடாது..!

தனது முதல் படமான கன்னட மொழியில் வெளியான கிரீக் பார்ட்டி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ரஷ்மிகா மந்தனா. இப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் செம ஹிட் அடித்த நிலையில், ராஷ்மிகாவிற்கு முதல் படமே வெற்றி படமாக அமைந்து விட்டது.
அதனைத் தொடர்ந்து, கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் கமிட் ஆகி அடுத்தடுத்து நடிக்கத் தொடங்கினார். தெலுங்கு மொழியில் இவர் கதாநாயகியாக நடித்து வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் இவரை பேன் இந்திய லெவல் பேமஸ் செய்தது.
அதில் வரும் பாடல்கள் இவரது நடிப்பு என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தது. இதனால், வெகு சில படங்களிலேயே முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக மாறிவிட்டார் ராஷ்மிகா.
தமிழில், சுல்தான் திரைப்படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்திலும் நடித்திருந்தார். புஷ்பா படத்தில் இவரது வித்தியாசமான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.
இந்தியில் அமிதாப் பச்சனுடன் குட் பாய், சித்தார்த் மல்கோத்ராவுடன் மிஷன் மஜ்னு, அனிமல், தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் புஷ்பா 2 உள்ளிட்ட படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இவ்வாறு கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என படு பிசியாக இருக்கும் ராஷ்மிகாவை பிரபல நடிகை ஒருவர் அவமானப்படுத்தியிருப்பது குறித்த வீடியோ செம வைரலாகி வருகிறது.
சமீபத்திய விழா ஒன்றில் புகைப்பட கலைஞர்கள் முன்பு ரஷ்மிகா மந்தனா போஸ் கொடுத்துக் கொண்டிருந்தபோது அந்த பக்கமாக பிரபல ஹிந்தி பட நடிகை ஸ்ரத்தா கபூர் வந்தார்.
இதனை பார்த்த ராஷ்மிகா மந்தனா, அவருடன் சேர்ந்து நிற்பதற்கு ஏதுவாக திரும்பி நின்றார். புகைப்பட கலைஞர்களும் ஸ்ரத்தா கபூருக்கு ஃபோகஸ் வைத்து, ராஷ்மிகாவுடன் நின்று போஸ் கொடுப்பார் என்று எதிர்பார்த்தனர். ஆனால், ராஷ்மிகாவை கண்டுகொள்ளாமல் அப்படியே நடந்து சென்றுவிட்டார் ஸ்ரத்தா கபூர்.
இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. வேண்டுமென்று ராஷ்மிகாவை தவிர்த்து அவமானப்படுத்தி இருக்கிறார் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் இணைய வாசிகள்.
Shraddha clearly ignored Rashmika🤨#RashmikaMandanna #ShraddhaKapoor #KiaraAdvani #SamanthaRuthPrabhu #KajalAggarwal #Kajol #TamannaahBhatia #DishaPatani #JanhviKapoor #Nayanthara #DeepikaPadukone #Leo #TrishaKrishnan #PriyankaMohan #MrunalThakur #PoojaHegde #SRK #bbtvi #Alia pic.twitter.com/yzrlfQMZNG
— Raphael Chopper (@prasa8332) September 21, 2023