இதுக்குமேல ரொம்ப கஷ்டம்.. பொறுமை இழந்து விடாமுயற்சியில் இருந்து விலகிய முக்கிய பிரபலம்..!

popular actor to replace from vidamuyarchi due to late shooting schedule

தமிழ் மொழியில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். துணிவு படத்திற்கு பின்னர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கை விரைவில் தொடங்கவுள்ளார்.

AK62 திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக முதலில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், படத்தின் கதை தயாரிப்பு நிறுவனத்திற்கு பிடிக்காத காரணத்தினால் இயக்குனர் விக்னேஷ் சிவன் விலகினார்.

popular actor to replace from vidamuyarchi due to late shooting schedule

கடந்த மாதமே இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில காரணங்களினால் படப்பிடிப்பு தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்றும், அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார் எனவும் தகவல் வெளியாகியிருந்தது.

ஆனால், ஷூட்டிங் லேட் ஆகி வருவதால், மற்ற படங்களுக்கு திரிஷா கால்ஷீட் கொடுத்துவிட்டதாகவும், இதன் காரணமாக விடாமுயற்சி படத்தில் நடிக்க தற்போது கால்ஷீட் தருவது சிரமம் என தகவல் வெளியாகியுள்ளது.

இப்படி ஒவ்வொருவராக படத்தை விட்டு விலகி வரும் நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகாவும் விலகும் முடிவில் இருப்பதாக கோலிவுட்டில் பேசப்பட்டு வந்தது.

தற்போது, இப்படத்தில் வில்லனாக கமிட் ஆகி இருந்த கைதி, மாஸ்டர் போன்ற படங்களில் நடித்த அர்ஜுன் தாஸ் விலகப்போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

popular actor to replace from vidamuyarchi due to late shooting schedule

ஷூட்டிங் தொடங்குவதில் தாமதம் ஆகி வருவதால் அவர் விலகுவதாகவும், அவருக்கு பதிலாக பிக்பாஸ் முதல் சீசன் டைட்டில் வின்னரான ஆரவ்வை வில்லனாக நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். நடிகர் ஆரவ் ஏற்கனவே மகிழ் திருமேனி இயக்கிய கலகத் தலைவன் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். தற்போது விடாமுயற்சி மூலம் மீண்டும் இணைந்துள்ளார்.

Share this post