தீராத மயோசிடிஸ்.. Cryotherapy சிகிச்சை வீடியோவை வெளியிட்ட நடிகை சமந்தா..!
நடிகை சமந்தா அமெரிக்காவில் ஓய்வில் இருப்பதாகவும், ஓராண்டுக்கு சினிமா பக்கம் தலை வைக்க மாட்டார் என்றும் கூறப்பட்டது. ஆனால் அடுத்த நொடியே விஜய் தேவரகொண்டா நடித்த குஷி படத்தின் ப்ரோமோஷனில் கலந்து கொண்டார் சமந்தா.
இதனிடையே, அந்த படத்தின் புரமோஷன் முடிந்த உடனேயே அவர் அமெரிக்காவுக்கு பறந்துவிட்டார். இந்நிலையில், படத்தின் புரமோஷனுக்காக மட்டுமே சமந்தா வந்ததாகவும், தொடர்ந்து ஓய்வெடுத்து வருவதாகவும் கூறப்பட்ட நிலையில், அவர் ஜிம் பயிற்சியாளருடன் வொர்க் அவுட் செய்த வீடியோக்களை வெளியானது.
இதனிடையே, வருண் தவானுக்கு ஜோடியாக சிட்டாடல் என்ற ஹிந்தி வெப்சீரிஸில் நடித்து வரும் சமந்தா அதற்காக மும்பை வந்தாரா? அல்லது அடுத்த இந்திப் படத்தில் நடிக்கப் போகிறாரா? என்ற பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.
இந்நிலையில், மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து தற்போது மீண்டு வரும் சமந்தா கிரியோதெரபி சிகிச்சை பெற எடுக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
"Recovery 🤍 #Cryotherapy" ~@Samanthaprabhu2#Samantha #SamanthaXTheMarvels #SamanthaRuthPrabhu pic.twitter.com/q5tJBNfZKF
— VIRALWEB INDIA (@VIRALWEBINDIA) November 4, 2023