'உனக்கு பிடித்தது போல இரு.. மற்றவர்களை சந்தோஷப்படுத்த நாம் வரவில்லை'.. உருக்கமாக பேசிய சமந்தா.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. கவுதம் மேனனின் Ye Maaya Chesave என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, நீதானே எந்தன் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, தெறி, அஞ்சான், 24, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.
தெலுங்கில், ஓ பேபி, ரங்கஸ்தலம், மகாநதி போன்ற பல வெற்றி திரைப்படங்களில் முன்னணி தெலுங்கு நடிகர்களுடனும் நடித்துள்ளார். மையோசிட்டிஸ் பிரச்சனைக்கு சிகிச்சை எடுத்து கொண்டே யசோதா டப்பிங் போன்ற பணிகளையும் ப்ரோமோஷன் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். இதுகுறித்து சமந்தா வெளியிட்ட புகைப்படம் வைரலானது.
தற்போது மயோசிடிஸ் என்கிற அரியவகை நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் நடிகை சமந்தாவுக்கு, இப்படத்தின் வெற்றி புத்துணர்ச்சியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில், ஒரு கையில் ஊசியுடன் சமந்தா ஒர்க் அவுட் செய்யும் புகைப்படத்தையும் வெளியிட்டார். இதனை பார்த்து ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வந்தனர்.
இந்நிலையில், கடந்த வாரம், நடிகை சமந்தா உடல்நிலை மோசமடைந்ததால் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால், சமந்தாவின் செய்தி தொடர்பாளர் இந்த தகவலை மறுத்ததோடு, சமந்தா தன்னுடைய ஹைதராபாத் வீட்டில் ஓய்வு எடுத்து வருவதாக தெரிவித்திருந்தார்.
மேலும், சமந்தாவின் உடல்நிலை நடக்க முடியாத அளவில் இருப்பதாக சொல்லப்பட்டது. அவரால் சிறிது தூரம் கூட நடக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. சமந்தாவிற்கு ஆயுர்வேத சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்ட நிலையில், இதை தொடர்ந்து சமாந்த மேல் சிகிச்சைக்காக விரைவில் வெளிநாடு செல்ல உள்ளாராம்.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த சமந்தா, நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017ல் திருமணம் செய்து கொண்டார். ஒருக்கட்டத்தில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து நாக சைதன்யாவை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் சமந்தா அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, எனக்கு கோபம் வரும் போதெல்லாம் நான் ஜிம்முக்கு சென்று கடுமையாக உடற்பயிற்சி செய்வேன். அதனால் என்னுடைய கோபம் குறைந்துவிடும். நான் பணம் பெயர் புகழுக்காக அலையமாட்டேன். பணம் எனக்கு முக்கியமே இல்லை. நடிப்பு தான் முக்கியம். நான் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நேசித்து தான் நடிக்கிறேன். செய்யும் வேலையை நேசிக்க முடியாத போது அதில் எந்தவித சந்தோஷமே இருக்காது.
எனக்கு நானே பெரிய விமர்சகி. நம்முடைய தவறுகளை நாம் தெரிந்து கொள்ளும்போது தான் தொழிலில் முன்னேற முடியும். காலம் நமக்கு சாதகமாக இல்லாத போது நமக்கு எதுவும் கைகூடாது. அந்த சமயத்தில் அதையே நினைத்து கவலைப்பட மாட்டேன். உனக்கு பிடித்தது போலவே நீ இரு. நீ இந்த பூமியின் மீது வந்தது மற்றவர்களின் பாராட்டை பெறுவதற்கோ அல்லது மற்றவர்களை சந்தோஷப்படுத்துவதற்காகவோ இல்லை. நம்மிடம் இருப்பதை வைத்து சந்தோஷப்பட்டாலே நமக்கு தேவையானது எல்லாம் நம்மை தேடி வரும் என்று கூறியிருக்கிறார்.