உடல் எடை கூடி ஆளே மாறிப்போன சாய் பல்லவி.. லேட்டஸ்ட் போட்டோஸ் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!
அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ப்ரேமம் திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தவர் சாய் பல்லவி. மலர் டீச்சராக ரசிகர்கள் மனதில் நாற்காலி போட்டு அமர்ந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வந்தார்.
தெலுங்கில் பிடா, மிடில் கிளாஸ் அப்பாயி, ஷ்யாம் சிங்க ராய் போன்ற படங்களிலும், தமிழில் தியா, மாரி 2, NGK போன்ற திரைப்படங்களிலும், மலையாள மொழியில் ப்ரேமம், காளி, அதிரன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதற்கு முன்னரே, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.
தென்னிந்திய திரையுலகத்தில் முன்னணி நடிகைகள் அந்தஸ்துக்கு உயர்ந்திருக்கும் சாய் பல்லவி, சமீபத்தில், விராடபர்வம், கார்கி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி அடையவில்லை என்றாலும், விமர்சனம் ரீதியாக பல்வேறு பாராட்டுக்களை குவித்தது. சாய் பல்லவியின் நடிப்பும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.
தற்போது, மாவீரன் படத்தில் நடித்து வரும் சாய் பல்லவி, லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் நடிகை சாய் பல்லவி உடல் எடை கூடி ஆளே மாறி போயுள்ளார். இந்த புகைப்படம் இவர் அண்மையில் கலந்துகொண்ட விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் எடுக்கப்பட்டது. இதை பார்த்த ரசிகர்கள், என்ன சாய் பல்லவி இப்படி ஆகிட்டிங்க என கேட்டு வருகின்றனர்.