"பாட்டு இங்க இருக்கு... உங்க வாய்ஸ் எங்க?" ட்ரோல் செய்த நெட்டிசன்கள்.. மாஸ் reply கொடுத்த மஞ்சு வாரியர்
தமிழ் மொழியில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். தமிழ் திரையுலகில் தனது மிக கடுமையான உழைப்பால் இந்த முன்னணி அந்தஸ்த்தை பெற்றுள்ள அஜித் நடிப்பில் திரைப்படம் வெளியானாலே அதனை ரசிகர்கள் கொண்டாட்டமாக மாற்றிவிடுவார்கள். அந்த வகையில், 3 வருட காத்திருப்பிற்கு பின்னர், வெளியான திரைப்படம் வலிமை.
தற்போது, வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார். 1985ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாகக் கதையாம். மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, பிக்பாஸ் பிரபலங்களான அமீர், பாவ்னி, சிபி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், இப்படத்தில் இருந்து, ஜிப்ரன் இசையில், சில்லா சில்லா பாடல் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் 2வது சிங்கிள் ‘காசேதான் கடவுளடா’ பாடல் நேற்று வெளியிடப்பட்டது. இப்பாடலை வைஷாக் என்பவருடன் மஞ்சு வாரியரும் பாடி உள்ளதாக கூறப்பட்டு இருந்தது. மஞ்சு வாரியர் பாடியுள்ள முதல் தமிழ் பாடல் என்பதால், இது எப்படி இருக்கும் என ஆவலோடு ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அவர்களும் பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. பாடல் முழுக்க வைஷாக்கின் குரல் மட்டுமே இருந்த நிலையில், கடுப்பான நெட்டிசன்கள், இதுக்கு தான் இவ்ளோ பில்டப்பா… உங்க வாய்ஸ எங்க? என மஞ்சு வாரியரை மீம் போட்டு கலாய்த்து வந்தனர்.
மீம்ஸ்கள் அதிகளவில் வந்ததால், இதுகுறித்து ட்விட்டரில் விளக்கம் அளித்த மஞ்சு வாரியர், “காசேதான் கடவுளடா பாடலில் என்னுடைய வாய்ஸ் கேட்கவில்லை என யாரும் வருத்தப்பட வேண்டாம். நான் ரெக்கார்ட் செய்தது வீடியோ வெர்ஷனுக்காக, படத்தில் அது இடம்பெறும். உங்கள் அக்கறைக்கு நன்றி. ட்ரோல்களை என்ஜாய் செய்தேன்” என கூலாக பதிவிட்டுள்ளார்.