'அந்த நேரத்தில சத்தியமா கண்ட்ரோல் பண்ண முடியாது..' ராகுல் ப்ரீத் சிங் கூறியதை கேட்டு ஷாக் ஆன சமந்தா..!
தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகைகளாக வலம் வருபவர்கள் சமந்தா மற்றும் ராகுல் ப்ரீத் சிங். இதில் சமந்தா ஒரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பிரபலங்களை பேட்டி கண்டு வந்தார். அந்த நிகழ்ச்சி நல்ல வரவேற்ப்பு பெற்றும் வந்தது.
அந்த நிகழ்ச்சிக்கு ராகுல் ப்ரீத் சிங் விருந்தினராக ஒரு முறை வந்திருந்தார். அப்போது அவரிடம் பல்வேறு தனிப்பட்ட விஷயங்கள் குறித்தும் சினிமா குறித்தும் கேள்விகளை கேட்டு வந்தார் சமந்தா.
அவரும் சுவாரசியமான பதில்களை சொல்லி வரவே நிகழ்ச்சி நல்ல விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தது. அப்போது, சமந்தா கேட்ட ஒரு கேள்விக்கு ராகுல் ப்ரீத் சிங் சொன்ன ஒரு பதில் அவரை ஷாக் ஆகிவிட்டது.
நீங்களா இப்படி என கேட்டு சமந்தா ஆச்சர்யப்பட்டது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நீங்கள் எப்போதுமே ஃபிட்டாக இருக்கிறீர்கள். அதற்கு உடற்பயிற்சி செய்கிறீர்கள். எல்லாம் சரி, உங்களுடைய உணவு முறை பற்றி கூறுங்கள்..! ஒருவேளை உங்கள் முன் டேபிள் மீது உங்களுக்கு பிடித்த அனைத்து உணவுகளையும் வைத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்..? என சமந்தா கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த நடிகை ராகுல் ப்ரீத் சிங், நான் உணவு கட்டுப்பாட்டோடு இருக்கிறேன். ஆனால் என் முன் எனக்கு பிடித்த உணவுகளை வைத்தால் என்னால் அந்த நேரத்தில் கண்ட்ரோல் பண்ணவே முடியாது.
கண்டிப்பாக அனைத்திலும் ஒவ்வொரு ஸ்பூன் எடுத்து ருசி பார்த்து விடுவேன். எந்த ஒரு பொருளையும் வேண்டாம் என ஒதுக்க மாட்டேன்.
நீங்கள் 100 உணவை வைத்தால் கூட அந்த நூறையும் ஒரு ஸ்பூனாவது சாப்பிட்டு ருசி பார்ப்பேன் என கூறினார். இதனை கேட்ட சமந்தா, 100 ஸ்பூன் சாப்பிடுவீர்களா..? நீங்களா என ஷாக் ஆகியுள்ளார்.