'நான் உங்களுக்கு வாடகை தாயாக இருப்பேன்' - பேட்டியில் பிரபலத்திடம் ஓப்பனாக பேசிய ரைசா..!
மாடலிங் மேல் கொண்ட விருப்பத்தினால் பல்வேறு அழகி போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர் ரைசா வில்சன். இதனைத் தொடர்ந்து பல்வேறு விளம்பர படங்களில் வாய்ப்புகள் வரவே நிறைய பிரபல ப்ராண்ட்களின் விளம்பர படங்களில் நடித்துள்ளார்.
பின்னர், தனுஷ், அமலா பால், கஜோல் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் கஜோல் அவர்களின் PA வாக நடித்திருந்தார். பெரிதும் அறியப்படாத கதாபாத்திரம் ஆக அது அமைந்து விட்டது.
பின்னர், கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ முதல் சீசன்லையே இவருக்கு பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.
இதில் இவருக்கு நல்ல விமர்சனங்களும் கிடைத்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்தது. இந்த ஷோ முடிவடைந்த பின்னர், ஹரிஷ் கல்யாண் ஜோடியாக பியார் பிரேமா காதல் திரைப்படத்தில் நடித்தார். இப்படம் இளசுகள் நடுவே நல்ல வரவேற்பை பெற்றது.
வர்மா, FIR, காஃபி வித் காதல் என அடுத்தடுத்து திரைப்படங்கள் கமிட் ஆகி வரும் ரைசா, தனது போட்டோஷூட் மற்றும் வீடியோக்கள் பதிவிட்டு சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் ரைசாவிடம், “லிவ்விங் ரிலேஷன்ஷிப்’ஆ? அல்லது திருமணமா..?” என கேட்டதற்கு கண்டிப்பாக திருமணம் செய்து கொள்ள ஆசை கிடையாது என கூறினார்.
லிவிங் ரிலேஷன்ஷிப் என்றால் குழந்தை பற்றிய யோசனை கிடையாதா..? என்று கேட்க்கப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ரைசா, “லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருப்பேன்.. குழந்தை வேண்டும் என்று முடிவு செய்தால் திருமணம் செய்து அதன் பிறகு தான் குழந்தை பெற்றுக் கொள்வேன்” என கூறியிருக்கிறார்.
அதைக் கேட்ட தொகுப்பாளர் எனக்கும் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என சொல்லவே, ரைசாஅதற்கு “நான் உங்களுக்கு வாடகை தாயாக இருப்பேன்” என்று கூறியிருக்கிறார். இந்த பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.