"அட்லீ என்னை நம்ப வெச்சு ஏமாத்திட்டார்.. கடைசி வரை இத என்கிட்ட சொல்லவே இல்ல.." பிரியாமணி பரபரப்பு பேட்டி..!
பெங்களூரில் பிறந்து வளர்ந்த ப்ரியாமணி, தனது பள்ளி காலம் முதலே, பல ஜவுளி கடைகளின் விளம்பர படங்களுக்கு நடித்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, மாடலிங்கில் ஈடுபட்டு வந்த ப்ரியாமணி, தெலுங்கு படமான Evare Atagaadu என்னும் படத்தில் நடித்தன் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து, கண்களால் கைது செய் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழி திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய ப்ரியாமணி, 25திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தற்போது கன்னடம் மற்றும் ஹிந்தி மொழியிலும் அதிக திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இந்திய லெவல் பேமஸ் ஆகியுள்ள ப்ரியாமணி, சில ரியாலிட்டி டான்ஸ் நிகழ்ச்சிகளில் நடுவராக உள்ளார். குறும்படம், வெப் சீரீஸ் என இவரது நடிப்பு திறமையை வளர்த்து கொண்டே போகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் வெளியாகி வசூல் மழையை குவிக்கும் ஜவான் திரைப்படத்தில் இவரும் நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்த சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய பிரியாமணி, ஜவான் திரைப்படத்தில் விஜய் மற்றும் அல்லு அர்ஜுன் ஆகியோர் கேமியோ கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியானது.
அது குறித்து உங்களுடைய கருத்து என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது. இந்த செய்தியை இன்டர்நெட் மூலமாக தான் தெரிந்து கொண்டேன். அட்லி எங்களிடம் எதுவும் கூறவில்லை.
இதனை தொடர்ந்து அட்லீயிடம் சென்று இந்த திரைப்படத்தில் விஜய் நடிக்கிறாரா..? என்று கேட்டதற்கு நடிக்க வைத்து விடலாம் என்று சிரித்து சிரித்தபடியே கூறினார்.
விஜய் சார் நடிப்பதாக இருந்தால் அவருடன் எனக்கும் ஒரு சின்ன காட்சியை வைத்து விடுங்கள் என்று கேட்டேன் அவ்வளவுதானே வச்சிடுவோம் என்று கூறினார். ஆனால், என்னுடன் விஜய் நடிக்கவே இல்லை.. நம்ப வச்சி ஏமாற்றிவிட்டார் அட்லி.
படம் பற்றி என்ன கேட்டாலும் பாத்துக்கலாம் .. பண்ணிடலாம்.. வச்சிடலாம்.. பாக்கலாம்.. என சிரித்துக் கொண்டே பதில் கூறுவார். ஆனால், படம் ரிலீஸ் ஆகும் வரை விஜய் அல்லது அல்லு அர்ஜுன் இந்த படத்தில் நடிக்கிறாரா..? இல்லையா..? என்ற எந்த விவரமும் எங்களுக்கு தெரியாது என ப்ரியாமணி கூறியுள்ளார்.