முடிவுக்கு வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.. சீரியலின் கடைசி எபிசோட் இதுதான்.. வெளியான தேதி மற்றும் விவரம்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலம். அதுவும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ஆரம்பித்தில் இருந்தே ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இல்லத்தரசிகளை விட இளைஞர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்புகளை எகிற வைத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ்.
அண்ணன் - தம்பி பாசம், கூட்டு குடும்பம் என வாழ்க்கையை எடுத்துக்காட்டாக காட்டும் இந்த சீரியல் தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அப்படி தமிழில் உருவாக்கப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மக்கள் வரவேற்பினால் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.
3 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொடருக்கும் இத்தொடரில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கும் விஜய் டெலிவிஷன் விருது கிடைத்தது. இந்த காலத்தில் எதார்த்தமாக நடக்கும் ஒரு விஷயம் தொடர்பாக கதை சென்று கொண்டிருப்பதால், ரசிகர்கள் ஆர்வமாக பார்க்க தொடங்கியுள்ளனர்.
மேலும், ஒரு கூட்டுக்குடும்பத்தில் நடக்கும் எதிர்பாராத சண்டைகள் வாக்குவாதங்கள் என சில பிரச்சனைகள் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திலும் எழுந்து வருகிறது.
தமிழில் உருவாக்கப்பட்ட இந்த தொடர் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த தொடர் முடிவுக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
புதிய வீடு, ஒன்றாக இணைந்த அண்ணன்-தம்பிகள், என எல்லா பிரச்சனைகளும் முடிவுக்கு வந்து வண்ணம் உள்ளன.
இதனால் தனத்திற்கு உடல்நிலை சரியாகி குடும்பமே சந்தோஷமாக இருப்பது போல் முடிவுக்கு கொண்டு வந்த செப்டம்பர் 30ம் தேதியோடு தொடர் முடிந்துவிடும் என்கின்றனர்.
ஆகஸ்ட் 2023 வரை 1325 எபிசோடுகளை எட்டியுள்ள இந்த தொடர் 1500 எபிசோடுகள் வந்து முடிவடையலாம் என சொல்லப்படுகிறது . ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.