Trending Video: ஹிந்தியில் வெளுத்து வாங்கிய நயன்.. பாலிவுட் நடிகைகளுக்கே டப் கொடுக்கறாங்க..!
கேரளா மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா, 2004ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, அடுத்தப்படமே சூப்பர்ஸ்டார் ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார்.
இப்படத்தில் ஹோம்லியான லுக்கில் சில கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.
கடந்த சுமார் 20 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார்.
தற்போது பாலிவுட்டில் அடியெடுத்து வைத்துள்ள நயன்தாரா, அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
திரையரங்குகளில் கடந்த வாரம் வெளியான இப்படம் என்னதான் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், ஒரு சிலர் நல்ல விமர்சனங்களை தந்து வருகின்றனர்.
மேலும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் செய்து வருகிறது. அதிலும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இப்படத்தில் க்யூட் ஆக நடித்துள்ளது குறித்து நிறைய பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், பாலிவுட் நடிகைகளை காட்டிலும் செமையாக ஹிந்தி பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் செம வைரல் ஆகி வருகிறது.
இந்த வீடியோவை சிலர் பகிர்ந்து, சில பாலிவுட் நடிகைகளை விட அழகாக நேர்த்தியாக ஹிந்தி பேசுகிறார். ஹிந்தியில் டாப் ஹீரோயின் ஆக போகிறார் என விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த வீடியோ இவரது Connect திரைப்படம் வந்த போது எடுத்த பேட்டி என்றாலும் தற்போது ஜவான் ரிலீசுக்கு பின் ட்ரெண்ட் ஆகி வருகிறது.