விஷால் இனி படங்களில் நடிக்க தடை..? சர்ச்சையில் சிக்கிய விஷால்..!
பிரபல தயாரிப்பாளரான G.K. ரெட்டி அவர்களின் மகனான விஷால், நடிகர் அர்ஜுன் அவர்களுக்கு அசிஸ்டென்ட் ஆக இருந்து வந்தவர். இதன் மூலம், இவருக்கு செல்லமே படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து, சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் தவிர்க்கமுடியாத நடிகர்களில் ஒருவராக மாறினார்.
நடிகர் சங்கத்தில் தற்போது முக்கிய பதவி வகித்து வரும் விஷால், சொந்தமாக விஷால் பிலிம் பேக்டரி என்னும் தயாரிப்பு கம்பெனியும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், படம் தயாரிக்க மதுரை அன்புச்செழியனிடம் ரூ.21 கோடியே 29 லட்சம் கடன் வாங்கி இருக்கிறார் விஷால். விஷாலால் இந்த தொகையை திருப்பி செலுத்த முடியாததால் அதனை லைகா நிறுவனம் ஏற்று திருப்பி செலுத்தியது.
விஷால் அந்த தொகையை தங்களுக்கு திருப்பி கொடுக்கும் வரை அவரது தயாரிப்பில் வெளியாகும் படங்களின் உரிமையை லைகாவுக்கு தருவதாக ஒப்புக்கொண்டார்.
பல படங்களில் நடித்து சம்பாதித்த போதும் கடனை திருப்பி செலுத்தாமல் இழுத்தடித்து வந்த நடிகர் விஷால் மீது லைகா நிறுவனம் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து விஷால் ரூ.15 கோடி பணத்தை நீதிமன்றத்தில் செலுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதோடு, அவர் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தை வெளியிட தடையும் விதித்து இருந்தது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது மார்க் ஆண்டனி படத்தை தயாரித்த மினி ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் ஆஜரான வக்கீல், மார்க் ஆண்டனி படத்துக்கும் விஷாலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் இப்படத்தை வெளியிட தடை விதித்தால் மிகப்பெரிய இழப்பு நேரிடும் என கூறியதை அடுத்து அப்படத்தை ரிலீஸ் செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.
தடையை நீக்கினாலும் நடிகர் விஷாலை நீதிபதி கடுமையாக எச்சரித்துள்ளார்.
விஷாலின் வங்கி விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, ஏதேனும் முரணாக இருந்தால் எதிர்காலத்தில் படத்தில் நடிக்க முடியாதபடி தடைவிதிப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மார்க் ஆண்டனி திரைப்படம் வருகிற செப்டம்பர் 15ம் தேதி திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.