அஜித்துடன் 11 வருட பகை..? சேராமல் இருக்கும் பிரபல கூட்டணி.. யாரும் அறியா பக்கம்..!
தமிழ் மொழியில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். அமராவதி, காதல் கோட்டை, அவள் வருவாளா, காதல் மன்னன் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த அஜித், வாலி, வரலாறு, பில்லா உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் இளைஞர்களின் பேவரைட் ஆக மாறிவிட்டார்.
தமிழ் திரையுலகில் தனது மிக கடுமையான உழைப்பால் இந்த முன்னணி அந்தஸ்த்தை பெற்றுள்ள அஜித், மங்காத்தா, ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், விஸ்வாசம், வேதாளம் உள்ளிட்ட படங்கள் மூலம் காமித்தார்.
அஜித் நடிப்பில் திரைப்படம் வெளியானாலே அதனை ரசிகர்கள் கொண்டாட்டமாக மாற்றிவிடுவார்கள்.
துணிவு படத்திற்கு பின்னர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கை விரைவில் தொடங்கவுள்ளார். இந்நிலையில், அஜித் உடன் 11 வருட மோதலில் இருந்த பிரபலம் ஒருவர் மீண்டும் அவருடன் இணைந்து திரைப்படங்களில் பணியாற்றப்போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
அதாவது, சில வருடங்களுக்கு முன் அஜித் மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இடையே சில மோதல்கள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், 2011ம் ஆண்டு வெளியான மங்காத்தா திரைப்படத்திற்கு பின்னர், அஜித் சன் பிக்ச்சர்ஸ் கூட்டணியில் எந்த படமும் நடிக்கவில்லை என கூறப்படுகிறது.
விடாமுயற்சி திரைப்படத்தை முதலில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிப்பதாக இருந்தது.
ஆனால், முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த போது, நயன்தாரா பேசி லைகா நிறுவனத்தை தயாரிக்க வைத்துள்ளார் என்று தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், கிட்டத்தட்ட 11 வருடமாக சன் பிக்சர்ஸ் - அஜித் கூட்டணி சேராமல் இருந்து வருகின்றார். இவர்கள் கூட்டணியில் விரைவில் ஒரு திரைப்படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.