இத பாத்தா அரபிக் குத்து மாதிரி இல்லையே.. அடடா என்னா ஹிப் ஷேக்.. வைரலாகும் சமந்தாவின் வீடியோ

Samantha dancing for arabic kuthu song goes viral

தென்னிந்திய திரையுலகில் டாப் ஹீரோயினிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. தனது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சில குழப்பத்தால் விமர்சனத்திற்கு உள்ளாகி வந்த இவர், தற்போது, படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். மேலும், புஷ்பா படத்தில் ஒரு குத்து பாடலுக்கு ஆடி செம வைரலாக பேசப்பட்டது.

தற்போது, விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் காதலர் தினம் அன்று வெளியாகி செம வைரல் ஆகி வருகிறது. இப்பாடல் இன்ஸ்டா ரீல்ஸ் ஆகி வரும் நிலையில், ஏர்போர்ட்டில் இப்பாடலுக்கு ஸ்டேப் போட்டு அதன் வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சமந்தா.

Share this post