எனக்கு அப்பா இல்ல.. உங்களுக்கு மகன் இல்ல.. நெகிழ்ச்சியாக வீடியோ பதிவிட்ட மும்தாஜ்..

Mumtaj emotional video celebrating birthday with her mother

டி ராஜேந்தர் இயக்கத்தில் 1999ம் ஆண்டு வெளியான மோனிஷா என் மோனாலிசா என்னும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் நடிகை மும்தாஜ். இதனைத் தொடர்ந்து, முக்கியமாக, சாக்லேட், குஷி மற்றும் லூட்டி திரைப்படங்களில் இவரது கிளாமர் பாடல்கள் இவரை பட்டிதொட்டியெங்கும் புகழடைய வைத்தது.

தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னட, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். பெரும்பாலும் கிளாமர் கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் மும்தாஜிற்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். இந்நிலையில், சினிமா மட்டுமல்லாது, விஜய் டிவியில், பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ், கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வந்தார்.

இறுதியாக கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 2வில் பங்கேற்றார். இதில் இவரது நேர்மையான குணத்தை கண்டு பாராட்டாத ஆட்களே இல்லை.

தற்போது தனது அம்மாவுடன் பிறந்த நாள் கொண்டாடும் வீடியோவை நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

Share this post