சூர்யா - பாலா மோதலா? படப்பிடிப்பில் இருந்து வெளியேறினாரா சூர்யா.. தீயாய் பரவும் தகவல் ! உண்மை காரணம் இதுதான் !

Rumours spreading suriya out of suriya41 shooting true information revealed

சூரரை போற்று, ஜெய் பீம் படங்களை தொடர்ந்து சூர்யா நிறைய படங்களில் அடுத்தடுத்து கமிட் ஆகி நடித்து வருகிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல், பாலா கூட்டணியில் ஒரு திரைப்படம் என நடித்து வருகிறார்.

Rumours spreading suriya out of suriya41 shooting true information revealed

பாலா இயக்கத்தில் நந்தா, பிதாமகன் என 2 பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்த சூர்யா, தற்போது இவர்கள் கூட்டணியில் 3வது முறையாக இணைந்துள்ள படம் சூர்யா 41.

Rumours spreading suriya out of suriya41 shooting true information revealed

2டி நிறுவனம் சார்பாக சூர்யா, ஜோதிகாவும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த சில மாதமாக கன்னியாகுமரியில் நடைபெற்று வந்தது.

Rumours spreading suriya out of suriya41 shooting true information revealed

திருவள்ளுவர் சிலை முன் சூர்யா நிற்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி வந்தன.

Rumours spreading suriya out of suriya41 shooting true information revealed

இந்நிலையில், சூர்யா 41 படப்பிடிப்பின் போது பாலாவுக்கும் சூர்யாவுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக நடிகர் சூர்யா படப்பிடிப்பில் இருந்து பாதியிலேயே வெளியேறியதாகவும் தகவல் வெளியானது.

Rumours spreading suriya out of suriya41 shooting true information revealed

தற்போது அதன உண்மை காரணம் வெளியாகி உள்ளது. அதன்படி, சூர்யா 41 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததன் காரணமாக தான் நடிகர் சூர்யா சென்றதாக கூறப்படுகிறது. கன்னியாகுமரியில் 34 நாட்கள் நடந்த 1வது ஷெட்யூல் முடிந்ததால், அடுத்த ஷெட்யூல் ஜூன் மாதம் தொடங்குகிறது என இணை தயாரிப்பாளர் ராஜசேகரபாண்டியன் அறிவித்துள்ளார்.

Share this post