'சூப்பர் ஸ்டார்'னா யாரு தெரியுமா ? தீயாய் பரவும் ரஜினி பேசிய வீடியோ.. இதனால தான் நீங்க எங்க 'சூப்பர் ஸ்டார்'

Rajinikanth speaks about superstar in function video getting viral

80ஸ்கள் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை பெற்றதோடு தலைவர் என ரசிகர்கள் அழைக்கும்படி தனது நற்பண்புகளையும் கொண்டுள்ளவர். பாட்ஷா, படையப்பா, அண்ணாமலை என தனது ஸ்டைல் மூலம் மக்கள் மனங்களை வென்றவர்.

Rajinikanth speaks about superstar in function video getting viral

70 வயது ஆன போதிலும் தனது ஸ்டைல், குணம் என எதுவும் மாறாது இன்னும் அதே சூப்பர்ஸ்டார் அந்தஸ்தில் இருக்கிறார். எவ்வளவு பேவரைட் நடிகர்கள் வந்தாலும் இவருக்கான தனி இடத்தை ரசிகர்கள் மாற்றுவதே இல்லை. இந்நிலையில், சினிமா விழா ஒன்றில், சூப்பர் ஸ்டார்ன்னா யார் என்பது பற்றி சூப்பர் ஸ்டார் ரஜினி பேசிய வீடியோ, தற்போது சோஷியல் மீடியாவில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

Rajinikanth speaks about superstar in function video getting viral

கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பே மிக தெளிவாக, யதார்த்தத்தை புரிந்து அவர் பேசிய வீடியோ ரசிகர்கள் அதிக அளவில் லைக் செய்து வருகிறார்கள். இந்த வீடியோ சாமி படத்தின் வெற்றி விழாவின் போது எடுக்கப்பட்டது என பலரும் கூறி வருகின்றனர்.

Rajinikanth speaks about superstar in function video getting viral

அந்த வீடியோவில் ரஜினி பேசுகையில், சூப்பர்ஸ்டார் என்பது, ஒரு கலெக்டர், ஒரு கமிஷனர், ஒரு டிஐஜி, ஒரு சிஎம், ஒரு பிஎம் போல ஒரு இடம். அந்தந்த காலகட்டத்தில் யார் வருகிறார்களோ, அவங்க அவங்க அந்த கால கட்டத்தில் எடுத்துக்குறாங்க. அவங்க போன பிறகு அந்த இடம் போய்விடுவதில்லை. அந்த ஆள் போய் விடுவார். ஆனால் பதவி அப்படியே தான் இருக்கும்.

Rajinikanth speaks about superstar in function video getting viral

Long Live King ன்னு சொல்வாங்க. கிங் எப்போ சாகிறானோ. அப்போது இன்னொரு கிங் வருவான். அதனால் அந்ததந்த காலகட்டத்தில் யார் நிறைய ஹிட்ஸ் கொடுக்கிறார்களோ, யாருடைய படம் நிறைய பணத்திற்கு போகிறதோ, யார நிறைய மக்கள் விரும்பி பார்க்கிறார்களா, யார் படம் வாங்கினா யாருக்கும் நஷ்டம் வராதோ அவங்க தான் சூப்பர் ஸ்டார். எத்தனையோ சூப்பர்ஸ்டார் இருக்கீங்க. எல்லோரும் சூப்பர்ஸ்டார் ஆக முடியும்’ என கூறியுள்ளார்.

Rajinikanth speaks about superstar in function video getting viral

இதை பார்த்த நெட்டிசன்கள் மிக சரியாக பேசி இருக்கிறார். இதனால் தான் இவரை சூப்பர் ஸ்டார் என கொண்டாடுகிறார்கள் என பாராட்டி புகழ்ந்து வருகிறார்கள்.

Share this post