'நான் நடிச்சதுல மோசமான படம் அதுதான்..' உண்மையை போட்டுடைத்த SK…! யாரும் தான் நடிச்சத இப்டி சொல்ல மாட்டாங்க !

Sivakarthiyan openly states about his own film that was bad

விஜய் தொலைக்காட்சியில் சாதாரணமாக தொகுப்பாளராக பணியாற்றி தனது நகைச்சுவை பேச்சுகளால் மக்கள் மனதில் நின்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் செம பேமஸ் ஆன இவர், பல பிரபல நிகழ்ச்சிகளையும், விருது வழங்கும் விழாக்களிலும் தொகுப்பாளராக இருந்துள்ளார்.

Sivakarthiyan openly states about his own film that was bad

இதன் நடுவே, ஒரு சில குறும்படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன், மெரினா திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார். அதனைத் தொடர்ந்து, ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த 3 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Sivakarthiyan openly states about his own film that was bad

அதன் பின்னர், மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட படங்கள் பெரிதும் வெற்றி பெறவில்லை என்றாலும், எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினிமுருகன், ரெமோ, வேலைக்காரன், கனா, டாக்டர் என தொடர் வெற்றிப்படங்களில் நடித்தார்.

Sivakarthiyan openly states about his own film that was bad

தற்போது, இவர் நடிப்பில் டான் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. அயலான் திரைப்படம் நிலுவையில் உள்ளது. நடிகர், பாடலாசிரியர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர் என பல திறமைகளை கொண்டவர்.

Sivakarthiyan openly states about his own film that was bad

இதனிடையே சிவகார்த்திகேயன் ஒரு சேனல் நேர்காணலில் அவர் பேசியது ரசிகர்கள் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அவர் கூறுகையில், என்னுடைய படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சாதனை படைக்கும் என கூறினார்.

Sivakarthiyan openly states about his own film that was bad

அப்போது, தொகுப்பாளர் நீங்கள் சொல்வது சீமராஜா தானே என கேட்டார். அதற்கு சிவகார்த்திகேயன் சீமராஜாவா? அந்த படம் கலவையான விமர்சனம் எல்லாம் இல்ல, சும்மா அடிச்சு தொம்சம் செய்யப்பட்ட மிகவும் மோசமான விமர்சனங்களை பெற்ற படம் என வெளிப்படையாக கூறினார்.

Sivakarthiyan openly states about his own film that was bad

இப்படி எந்த ஒரு நடிகரும் தான் நடித்த படங்களை பற்றி இவ்ளோ மோசமா சொல்ல மாட்டாங்க என வியந்து பாராட்டி வருகின்றனர்.

Share this post