Viral Video: பிக்பாஸ் வீட்டிற்குள் ராபர்ட் மாஸ்டர் காதலி அனுப்பிய ஷாக்கிங் விஷயம்.. ரச்சிதா பின் சுற்றியதால் ஏற்பட்ட விளைவு!
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 6ல் யூடியூபர் ஜி.பி.முத்து, திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர், நடிகை ஆயிஷா, நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் பாடகர் ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே. கதிரவன், மாடல் குயின்சி, மாடல் நீவா, பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி, மைனா நந்தினி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
21 போட்டியாளர்களில் இப்போது 18 போட்டியாளர் உள்ளார்கள். கானா பாடகர் அசல் கோலார், மெட்டி ஒலி சாந்தி உள்ளிட்டோர் ஏவிக்ட் ஆகிவிட்டனர். ஜிபி முத்து மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் அவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளியேறினார். மேலும், ஷெரினா, வி.ஜே.மகேஸ்வரி, நிவாஷினி எவிக்ட் ஆகி வெளியேறினர்.
இந்த 6வது சீசனில் சர்ச்சைக்கு பெயர் பெற்றவர்கள் அசீம், அசல் கோளார், ராபர்ட் மாஸ்டர். இதில் பெண்களிடம் தகாத முறையில் நடந்து வருவதாக அசல் கோளார் மீது விமர்சனங்கள் எழுந்து வந்தது. மேலும், அவர் ஏவிக்ட் ஆனார். பின்னர், அசீம் தேவையற்ற வார்த்தைகள் உபயோகிப்பது, ஒருமையில் பேசுவது என சர்ச்சையில் சிக்கி வருகிறார். இவரைத் தொடர்ந்து, ராபர்ட் மாஸ்டர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த நாள் முதலே, ரக்ஷிதா மீது ஒரு கண் அவருக்கு இருந்த நிலையில், அரண்மனை டாஸ்கில் சற்று அத்துமீறி நடந்து கொண்டதை பார்க்க முடிந்தது.
ராபர்ட் மாஸ்டர் தன்னிடம் எப்படி பழகுகிறார் என்பதை அறிந்து கொண்ட, ரக்ஷிதா அவரிடம் இருந்து விலகி விலகி போனதையும் பார்க்க முடிந்தது. இந்நிலையில் இவர் செய்த அட்ராசிட்டியை வெளியில் இருந்து, பாத்து வந்த அவரது காதலி தற்போது ராபர்ட் மாஸ்டர் அன்பளிப்பாக கொடுத்த மோதிரத்தை, அவருக்கு பொருட்கள் அனுப்பும் போது அந்த பெட்டியில் போட்டு அனுப்பி, பிக்பாஸ் வீட்டின் உள்ளேயே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார். இந்த மோதிரத்தை பார்த்து செம்ம ஷாக்கான ராபர்ட் மாஸ்டர் இது குறித்து குயின்சியிடம் பேசிய வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
#Robert master atrocities paarthu his GF returned the ring...Master shocked...seinja velai appadi#Biggbosstamil6 pic.twitter.com/c2VU8HbgfY
— Aadhik Sri (@aadhik_vet09) November 19, 2022