Viral Video: 'இப்படி பண்ணா மக்கள் கண்டிப்பா துப்புவாங்க' மேடையில் படு ஓப்பனாக பேசிய சந்தானம்..
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் கலை துறையில் அடியெடுத்து வைத்தவர் நடிகர் சந்தானம். இதனைத் தொடர்ந்து, இவருக்கு மன்மதன் படத்தில் சிம்பு உடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர், சச்சின் மற்றும் பொல்லாதவன் திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது. விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு என அனைத்து முன்னணி நடிகர்கள் படத்திலும் நடித்துள்ளார்.
அறை எண் 305ல் கடவுள், சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற திரைப்படங்கள் இவரது நடிப்பு பயணத்தில் திருப்புமுனையாக அமைந்தது. பின்னர், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர், இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, சக்க போடு போடு ராஜா, தில்லுக்கு துட்டு 2, A1, டகால்ட்டி, பிஸ்க்கோத், பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, சபாபதி, குலுகுலு உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
கடந்த 2019ல் தெலுங்கு சினிமாவில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படமான “ஏஜென்ட் சீனிவாச ஆத்ரேய” படத்தின் தமிழ் ரீமேக்கில் உருவாகியுள்ள “ஏஜென்ட் கண்ணாயிரம்” படத்தில் சந்தானம் நடித்துள்ளார். “வஞ்சகர் உலகம்” என்ற திரைபடத்தை இயக்கியிருந்த இயக்குனர் மனோஜ் பிதா இப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படமானது வரும் 25ம் தேதி திரையில் வெளியாகவுள்ளது.
ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படத்தில் சந்தானம், ரியா சுமன், ரெடின் கிங்ஸ்லி, முனிஷ், விஜய் டிவி புகழ், குரு சோமசுந்தரம் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தின் யுவன் சங்கர் ராஜாவின் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியாகியிருந்த இப்படத்தின் ஒப்பாரி பாடலானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் தான் தற்போது ஏஜென்ட் கண்ணாயிரம் படக்குழு செய்தியாளர்களை சென்னையில் சந்தித்திருந்தது. இந்த நேர்கானலில் சந்தானம், இயக்குனர் மஜோஜ் பிதா, விஜய் டிவி புகழ், ரியா சுமன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய நடிகர் சந்தானம் இந்த திரைப்படத்தில் நான் சில காட்சிகளில் பஞ்ச் டைலாக்குகளை சேர்க்கலாமா என்று கேட்டபோது அதற்கு இயக்குனர் மனோஜ் பிதா மறுத்து விட்டார். அதே நேரத்தில் தெலுங்கு திரைப்படத்தை போல இருக்காமல் இந்த கதைக்கு என்ன தேவையோ அதனை செய்திருக்கிறோம் என்று கூறினார். பிறகு செய்தியாளர் ஒருவர் மக்கள் தற்போது மிகவும் கன்டண்ட்டை விரும்புகின்றனர் குறிப்பாக ஓடிடி வந்த பிறகு ரசிகர்கள் பல படங்களை பார்க்க ஆரம்பித்து விட்டனர், உலக சினிமா தெரிந்து விட்டது, இந்நிலையில் படத்தின் கண்டன்ட் எந்த அளவிற்க்கு முக்கியம் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்த நடிகர் சந்தானம், ‘அப்போதிலிருந்தே மக்கள் புத்திசாலியாகத்தான் இருக்கிறார்கள். அதனால் தான் நல்ல படம் மட்டுமே ஹிட் ஆகிறது. அதே போலத்தான் இப்போதும் நல்ல திரைப்படங்கள் ஹிட் அடிக்கிறது. நல்ல கண்டன்ட்டை புதிதாக யோசித்து சரியாக செய்தால் ஹிட் ஆகும், அப்படி இல்லாமல் அரைத்த மாவையே அரைத்தால் அவ்ளோதான் என்று கூறிய நடிகர் சந்தானம், அப்போது கொஞ்சமாக துப்பினார்கள் இப்பொது சோஷியல் மீடியாக்கள் இருப்பதினால் ரொம்ப துப்புகிறார்கள் என்று கூலாக கூறியிருந்தார்.