'திருமணமான கணவர்களை திருடுபவர்.. நேர்ல பாத்தா அறைஞ்சுருவேன்' கண்டபடி திட்டிய பிரபல தமிழ் நடிகரின் மனைவி
கேரளா மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா, 2004ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, அடுத்தப்படமே சூப்பர்ஸ்டார் ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். இப்படத்தில் ஹோம்லியான லுக்கில் சில கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.
கஜினி, சிவகாசி, வல்லவன் போன்ற போன்ற படங்களில் சூர்யா, விஜய், சிம்பு போன்ற தமிழ் டாப் நடிகர்களுடன் நடித்தார். கடந்த சுமார் 20 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார்.
கோலமாவு கோகிலா, டோரா, கொலையுதிர் காலம் போன்ற படங்களில் நடித்து தனக்கென இடத்தை பிடித்தார். இதன் நடுவே, நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததன் மூலம் அப்படத்தின் இயக்குனர் ஆன, விக்னேஷ் சிவன் உடன் காதல் ஏற்பட்டு 7 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்தனர்.
மகாபலிபுரத்தில் கடந்த ஜுன் 9ம் தேதி நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, டபுள் ட்ரீட்டாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர், வாடகை தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தைகளை விக்கி - நயன் தம்பதி பெற்றெடுத்தனர். சரியாக விதிமுறையை கடைபிடிக்கவில்லை என்று சர்ச்சை எழவே, தாங்கள் 2016ம் ஆண்டே பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும், 2021ம் ஆண்டு வாடகை தாய் முறையில் குழந்தை பெற்றெடுக்கும் வேலையை தொடங்கியதாகவும் சாட்சிகளை விசாரணையில் சமர்ப்பித்தனர்.
லேடி சூப்பர்ஸ்டார் ஆக வலம் வரும் நயன்தாரா, திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய காலத்தில் சிம்புவுடன் காதலில் இருந்தது அனைவரும் அறிந்த ஒன்றே. வல்லவன் படத்தில் இருவரும் நெருக்கமாக நடித்தது, இவர்கள் அந்தரங்க புகைப்படங்கள் என பரவியது. சில ஆண்டுகளுக்கு பின் கருத்து வேறுபாடு காரணமாக சிம்பு - நயன்தாரா பிரிந்தனர். பின்னர், இயக்குனர் பிரபுதேவாவுடன் காதலில் இருந்து வந்தார். திருமணம் செய்துகொள்ள போகும் அளவிற்கு இருவரும் சென்றனர். ஆனால், பிரபு தேவாவின் முதல் மனைவி பிரச்சனை கொடுத்ததால் அதிலிருந்து விலகிவிட்டார்.
பிரபுதேவாவின் மனைவி ரமலத் நயன்தாராவை படுகேவலமாக விமர்சித்து ‘திருமணமான கணவர்களை திருடுபவர்’ என்றும் அவரை பார்த்தால் அறைந்துவிடுவேன் என்றும் ஆவேசமாக பேசியிருந்தார். இதனால் நயன்தாரா பிரபுதேவாவை காதலித்ததால் பல அவமானங்களை சந்தித்து சினிமாவை விட்டே வெளியேற முடிவெடுத்தார். அப்போது தான் இயக்குனர் விக்னேஷ் சிவன் அறிமுகம் பெறவே, இருவரும் காதலித்து தற்போது திருமணம் குழந்தைகள் என செட்டில் ஆகியுள்ளனர். நயன்தாரா சமீபத்தில் தனது 38வது பிறந்தநாளை கொண்டாடுவதால் அவர் பட்ட கஷ்டங்கள் குறித்து ரசிகர்கள் பேசி வருகின்றனர்.