Viral Video:என்ன நம்ப வெச்சு ஏமாத்திட்டிங்க.. ரச்சிதாவை வார்த்தைகளால் காயப்படுத்திய ராபர்ட் மாஸ்டர்!
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 6ல் யூடியூபர் ஜி.பி.முத்து, திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர், நடிகை ஆயிஷா, மாடல் ஷெரினா, நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் பாடகர் ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே. கதிரவன், மாடல் குயின்சி, மாடல் நீவா, பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி, மைனா நந்தினி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
21 போட்டியாளர்களில் இப்போது 18 போட்டியாளர் உள்ளார்கள். கானா பாடகர் அசல் கோலார், மெட்டி ஒலி சாந்தி உள்ளிட்டோர் ஏவிக்ட் ஆகிவிட்டனர். ஜிபி முத்து மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் அவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளியேறினார். மேலும், ஷெரினா, வி.ஜே.மகேஸ்வரி எவிக்ட் ஆகி வெளியேறினர்.
கமல் வார்னிங் கொடுத்ததால் கடந்த இரண்டு வாரங்களாக சைலண்டாக இருந்து வந்த அசீம், வேதாளம் முருங்க மரம் ஏறுன கதை போல் தற்போது மீண்டும் கத்தி ஆக்ரோஷமாக விக்ரமனுடன் இந்த டாஸ்க்கின் போது சண்டையிட்டுள்ளார். ராஜாவாக ராபர்ட் மாஸ்டரும், ராணியாக ரக்ஷிதாவும் மந்திரியாக விக்ரமனும், படைத்தளபதியாக அசீமும் உள்ளனர்.
நேற்று இந்த டாஸ்க்கில் ஒரு பக்கம் அசீம் - விக்ரமன் இடையே பிரச்சனை எழுந்த நிலையில் இன்னொரு பக்கம் ராபர்ட் மற்றும் ரக்சிதாவின் ரொமான்ஸ் காட்சிகளும் ஓடி வருகின்றன. இந்நிலையில், அரண்மனை போல பிக் பாஸ் வீடானது மாற்றப்பட்டது. அதில் வரவேற்பறையில் வீர வாழ்கலும் நகை அணிகலன்களும், மற்றொரு அமரும் இடத்தில் அரண்மனை போல நாற்காலிகள், படுக்கும் அறையின் முற்றிலுமாக மாற்றப்பட்டது.
இந்த டாஸ்க்கில் ரஷிதா அசீம் இருவருக்கும் ரகசிய டாஸ்க் ஒன்று பிக்பாசால் கொடுக்கப்பட்டது. பின்னர், அதுகுறித்து, உண்மையும் சொல்லப்பட்டது. இதனால் ராபர்ட் மாஸ்டர் கதறி அழுகிறார். ராணியாக இருந்த ரட்சிதா ராஜாவாக இருந்த தன்னை ஏமாற்றி விட்டார் என்று உடைந்து அழுகிறார். பின்னர், வீட்டில் உள்ள அனைவரும் அவரை சமாதானப்படுத்த நினைத்து பேசுகின்றனர். அப்போது, ரஷிதா பேச வரவே இனி யாரும் பேச வேண்டாம் என தவிர்த்து விட்டார். இந்த வீடியோ செம வைரலாகி வருகிறது.