எல்லைமீறும் ராபர்ட்.. வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்கிறாரா ரச்சிதா கணவர் தினேஷ்? அவரே சொன்ன பதில்!

rachitha husband dinesh speaks up about rumours spreading about his wild card entry in biggboss house

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.

rachitha husband dinesh speaks up about rumours spreading about his wild card entry in biggboss house

இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.

rachitha husband dinesh speaks up about rumours spreading about his wild card entry in biggboss house

பிக்பாஸ் சீசன் 6ல் யூடியூபர் ஜி.பி.முத்து, திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர், நடிகை ஆயிஷா, மாடல் ஷெரினா, நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் பாடகர் ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே. கதிரவன், மாடல் குயின்சி, மாடல் நீவா, பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி, மைனா நந்தினி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

rachitha husband dinesh speaks up about rumours spreading about his wild card entry in biggboss house

21 போட்டியாளர்களில் இப்போது 18 போட்டியாளர் உள்ளார்கள். கானா பாடகர் அசல் கோலார், மெட்டி ஒலி சாந்தி உள்ளிட்டோர் ஏவிக்ட் ஆகிவிட்டனர். ஜிபி முத்து மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் அவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளியேறினார். மேலும், ஷெரினா, வி.ஜே.மகேஸ்வரி எவிக்ட் ஆகி வெளியேறினர்.

rachitha husband dinesh speaks up about rumours spreading about his wild card entry in biggboss house

இதில் ராபர்ட் மாஸ்டர் சக போட்டியாளரான ரச்சிதாவை பார்த்ததும் என்னுடைய கிரஷ் நீங்க தான் என முதல் எபிசோடிலேயே சொல்லிவிட்டார். அதையடுத்து அவர் தொடர்ந்து ரச்சிதாவிற்கு நூல்விட்டு வருவதை பார்த்த ரசிகர்கள் அவரை மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர். ஒரு கட்டத்தில் ராபர்ட்டில் டார்ச்சர் தாங்க முடியாமல் நீங்க எனக்கு அண்ணன் மாதிரி என்று ஓப்பனாகவே சொல்லிவிட்டார் ரச்சிதா.

rachitha husband dinesh speaks up about rumours spreading about his wild card entry in biggboss house

அதன்பின்னர் அவரை விடாமல் பாலோ பண்ணி வரும் ராபர்ட், சின்ன சின்ன காதல் லீலைகள் செய்து வருவதை நெட்டிசன்கள் வீடியோ போட்டு கலாய்த்து தள்ளி வருகின்றனர். தற்போது நடைபெற்று வரும் ராஜா ராணி டாஸ்கில் ரச்சிதா ராணியாகவும் ராபர்ட் மாஸ்டர் ராஜாவாகவும் நடித்து வருகின்றனர். இதில், சீக்ரெட் டாஸ்க் ரச்சிதா செய்ததை ஏற்று கொள்ள முடியாமல் ராபர்ட் மாஸ்டர் ஏமாத்திட்டா என கதறி அழும் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

rachitha husband dinesh speaks up about rumours spreading about his wild card entry in biggboss house

இதனிடையே சமீபத்திய பேட்டியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரச்சிதா எப்படி விளையாடுகிறார், ராபர்ட் மாஸ்டரின் செயல்பாடுகள் குறித்தும் ரச்சிதாவின் கணவர் தினேஷ் இடம் கேட்டுள்ளனர். அதன்படி ராபர்ட் செய்வதையெல்லாம் பார்க்கும் போது தனக்கு காமெடியாக இருப்பதாக கூறி உள்ள அவர், ரச்சிதா மிகவும் தெளிவாக விளையாடி வருவதாகவும், அவர் இறுதிவரை செல்வார் என்கிற நம்பிக்கை இருப்பதாகவும் கூறினார்.

rachitha husband dinesh speaks up about rumours spreading about his wild card entry in biggboss house

அதோடு வைல்டு கார்டு போட்டியாளராக செல்ல வாய்ப்பு இருக்கிறதா என்கிற கேள்விக்கு பதிலளித்த தினேஷ், நான் வைல்டு கார்டு போட்டியாளராக சென்றால் அங்கு ஒன்றும் மாறப்போறது இல்லை. அதுமட்டுமின்றி தற்போது இரண்டு சீரியல்களில் நடிக்க கமிட் ஆகி உள்ளதால், பிக்பாஸ் குழுவினர் அழைத்தாலும் வாய்ப்பில்ல ராஜா என்பது தான் என்னுடைய பதிலாக இருக்கும் என கூலாக விளக்கம் அளித்துள்ளார்.

rachitha husband dinesh speaks up about rumours spreading about his wild card entry in biggboss house

ரச்சிதா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் தாங்கள் இருவரும் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் அந்த பேட்டியில் அவர் சூசகமாக தெரிவித்திருந்தார். மேலும் அந்த பேட்டி முழுக்க அவர் ரச்சிதாவை ஒரு இடத்தில் கூட விட்டுக்கொடுக்காமல் பேசியதை பார்த்த ரசிகர்கள், இப்படி ஒரு கணவர் கிடைக்க ரச்சிதா கொடுத்து வச்சிருக்கனும் என பாராட்டி வருகின்றனர்.

Share this post