கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுன.. சமூக வலைதளத்தில் இருந்து திடீரென விலகிய ரத்னகுமார்..!

rathna kumar post get viral

விக்ரம் மற்றும் லியோ ஆகிய இரு படங்களிலும் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து பணியாற்றிய இயக்குனர் ரத்னகுமார், தற்போது லியோ சக்சஸ் மீட் நிகழ்வில் மறைமுகமாக ரஜினியை தாக்கி பேசியது வைரலாகி வருகிறது.

rathna kumar post get viral

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் லியோ திரைப்படத்தின் வெற்றி விழா நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதில், விஜய் உட்பட படத்தில் பணியாற்றிய பல நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என பலர் பங்கேற்று பேசினார்கள். இந்நிலையில், லியோ படத்தின் வசனகர்த்தாவும், இயக்குனருமாகிய ரத்தினகுமார் பேசியது சர்ச்சை கிளப்பியுள்ளது.

rathna kumar post get viral

அதாவது, கழுகு எவ்வளவு மேல பறந்தாலும் பசிச்சா கீழே வந்து தான் ஆகணும் என பேசியது ரஜினி ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளது. அதாவது, ஜெய்லர் ஆடியோ லாஞ்சில் ரஜினி கழுகு காகத்தை வைத்து ஒரு கதை கூறியிருந்தார். அதை தாக்கும் விதமாகவும், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இவர் பேசியதாக தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

rathna kumar post get viral

இந்நிலையில், ரத்தினகுமார் தனது சோசியல் மீடியா பக்கத்தில் நான் சமூக வலைதளங்களில் இருந்து விலகப் போகிறேன். என்னுடைய அடுத்த படம் அறிவிப்பு வரை ஆஃப்லைன் செய்கிறேன் என்று பதிவிட்டு உள்ளார்.

Share this post