"பசிச்சா கீழே வந்து தானே ஆகணும்".. ரஜினியை வம்பு இழுத்த இயக்குனர் ரத்னகுமார்..!
விக்ரம் மற்றும் லியோ ஆகிய இரு படங்களிலும் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து பணியாற்றிய இயக்குனர் ரத்னகுமார், தற்போது லியோ சக்சஸ் மீட் நிகழ்வில் மறைமுகமாக ரஜினியை தாக்கி பேசியது வைரலாகி வருகிறது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் லியோ திரைப்படத்தின் வெற்றி விழா நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதில், விஜய் உட்பட படத்தில் பணியாற்றிய பல நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என பலர் பங்கேற்று பேசினார்கள். இந்நிலையில், லியோ படத்தின் வசனகர்த்தாவும், இயக்குனருமாகிய ரத்தினகுமார் பேசியது சர்ச்சை கிளப்பியுள்ளது.
அதாவது, கழுகு எவ்வளவு மேல பறந்தாலும் பசிச்சா கீழே வந்து தான் ஆகணும் என பேசியது ரஜினி ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளது. அதாவது, ஜெய்லர் ஆடியோ லாஞ்சில் ரஜினி கழுகு காகத்தை வைத்து ஒரு கதை கூறியிருந்தார். அதை தாக்கும் விதமாகவும், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இவர் பேசியதாக தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
ரத்ன குமாருடன், ஜில் ஜங் ஜக் புகழ் இயக்குனர் தீரஜ் வைத்தியும் மேடையில் இருந்தார். தீரஜ் லியோவில் இணை எழுத்தாளராகவும் பணிபுரிந்தார். மேலும் இந்த வாய்ப்பிற்காக தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.
மேலும், த்ரிஷா கிருஷ்ணன், கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன் சர்ஜா, மடோனா செபாஸ்டியன் மற்றும் பல நடிகர்களும் அந்த இடத்தை அலங்கரித்துள்ளனர். மேலும் அவர்கள் அந்த இடத்தில் பேசி தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
‘பசிச்சா கீழே வந்து தானே ஆகணும்’ .. லியோ விழாவில் ரஜினியை அட்டாக் பண்ணினாரா ரத்னகுமார்? - கிளம்பிய சர்ச்சை#leosuccessmeet #thalapathyvijay #Rajinikanth #Rathnakumarhttps://t.co/ayUR5NfCOb
— ABP Nadu (@abpnadu) November 1, 2023