திருமணமான நடிகருடன் அஜால் குஜால்… ராஷ்மிகாவின் வீடியோவை பார்த்து நொந்துபோன நெட்டிசன்ஸ்..!
ராஷ்மிகா மந்தனா தனது அடுத்த படமான அனிமல் மூலம் பாலிவுட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் ஹீரோவாக நடித்த இப்படம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சமீபத்தில், ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள “Ammayi” (தெலுங்கு பதிப்பின் பாடல்) பாடல் வெளியிடப்பட்டது, மேலும் இது சமூக ஊடகங்களில் விவாதத்தைத் ஏற்படுத்தியது. பாடலில் ரன்பீர் மற்றும் ராஷ்மிகா மந்தனா இடையே லிப் லாக் முத்த காட்சி இருந்தது குறித்து சமூக வலைதளங்களில் பேசும் பொருளானது.
இந்த லிப்லாக் காட்சிகளுக்கு ராஷ்மிகா மந்தனா கூடுதல் சம்பளம் கேட்டதாக சில தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ராஷ்மிகா மந்தனா முத்தத காட்சிக்கு கூடுதல் பணம் கேட்டதாகவும் தகவல்கள் வெளியானது. தற்போது பாலிவுட் ஹீரோ ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் படத்தில் நடிக்க ரூ 4 கோடி 4 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாகவும், மேலும் முத்த காட்சிக்கு என்று தனியாக கூடுதல் சம்பளம் என்று கட்டாயப்படுத்துவதாகவும், சமூக வலைதளங்களில் சில தகவல்கள் வெளிவந்தது.
இது தொடர்பாக பேசிய ராஷ்மிகா மந்தனா முத்த காட்சியில் நடிப்பதற்காக கூடுதல் பணம் கேட்கவில்லை. கதை பிடித்திருந்தால் எந்த மாதிரி காட்சி ஆனாலும் நடிப்பேன் என்று விளக்கம் அளித்துள்ளார்.
இந்நிலையில் ராஷ்மிகா, ரன்பீர் நடிப்பில் உருவான அனிமல் படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. படத்தில் நடிகை ராஷ்மிகா, எல்லைமீறிய அரைகுறை ஆடை காட்சிகளிலும், ரன்பீர்உடன் முத்தக்காட்சியிலும் நடித்து முகம் சுளிக்க வைத்து உள்ளார். அந்த காட்சிகளை நெட்டிசன்கள் இணையத்தில் பகிர்ந்து இதை நாங்கள் உங்களிடம் எதிர்ப்பார்க்கவில்லை என்று ராஷ்மிகா மந்தனாவை விமர்சித்து வருகிறார்கள்.