தினேஷ் கூட ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்.. மனம் திறந்து எமோஷனலான ரக்ஷிதா..!
முதல் சீரியலிலேயே தினேஷ் மற்றும் ரக்ஷிதா ஒன்றாக சேர்ந்து நடித்த போது நண்பர்கள் ஆகி பிறகு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால், தற்போது இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். தினேஷ் பிக் பாஸ் சீசன் 7ல் கலந்து கொண்டுள்ளார்.
தனது மனைவியுடன் சேர விரும்புகிறேன். என்னுடைய மனைவிக்கு பிக் பாஸ் டைட்டில் ரொம்பவே பிடிக்கும். அதனால், அவருக்காக நான் இந்த டைட்டிலை வாங்கி பரிசளிப்பேன் என்று தெரிவித்திருந்தார். இதனால், ரசிகர்கள் பலரும் தினேஷ் மற்றும் ரக்ஷிதா ஜோடி இருவரும் மீண்டும் இணைந்து வாழ வேண்டும் என்று சோசியல் மீடியா பக்கங்களில் தங்களது விருப்பத்தை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், ரக்ஷிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எமோஷனலாக ஒரு பதிவை பகிர்ந்து உள்ளார். அதில், அவர் எல்லோரும் வலி ஏற்படுத்தியவர்களை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். நான் இந்த அளவுக்கு உறுதியான முடிவில் இருக்க வேண்டும் என்றால் எவ்வளவு வலியை சந்தித்து இருப்பேன் என்று யாருமே யோசிக்கவில்லை என்று எமோஷனலாக ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.