மன்சூர் அலிகானின் சர்ச்சை கருத்து :'ஒத்துழைப்பு தாருங்கள்' என த்ரிஷாவுக்கு காவல்துறை கடிதம்..!

actress-trisha-gets-letter-from-thousand-lights-police-regarding-mansoor-ali-khan-issue

15 வருடங்களுக்கு பிறகு லியோ படத்தின் மூலமாக நடிகர் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார். இந்த படத்தில் இவர்களுக்கு இடம் பெற்று இருந்த ரொமான்ஸ் காட்சிகள் ரசிக்கும் படி அமைந்திருந்தது.

actress-trisha-gets-letter-from-thousand-lights-police-regarding-mansoor-ali-khan-issue

இதனையடுத்து, திரிஷா நடிகர் அஜித்குமார் நடிக்கும் விடாமுயற்சி என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மன்சூர் அலிகான் இந்த விஷயத்தை சொல்லி இருப்பேன்.

ஆனால், கலவரம் பண்ண சில பேர் இருக்கிறார்கள். அதனால் சும்மா இருந்து விட்டேன். திரிஷாவுடன் நடிக்கிறோம் பெட்ரூம் சீன் இருக்கும் குஷ்பு, ரோஜாவை கட்டிலில்தூக்கி போட்ட மாதிரி திரிஷா போடலாம் என்று நினைத்தேன் என மன்சூர் அலி கான் கூறியுள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

actress-trisha-gets-letter-from-thousand-lights-police-regarding-mansoor-ali-khan-issue

இது குறித்த அவர் வெளியீட்ட அறிக்கையில் நான் வரும் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள நிலையில், வேண்டும் என்று இதுபோன்ற அவதூறுகள் பரப்படுகிறது என குற்றம் சாட்டியுள்ளார். மேலும், பழைய படங்கள் போல கதாநாயகிகளுடன் தற்போது நடிக்க வாய்ப்பில்லை என்பதை நகைச்சுவையாக தெரிவித்தேன். அந்த வீடியோவை கட் செய்து அவதூறு பரவி வருகிறார்கள். இதற்கு எல்லாம் அஞ்சு பவன் நான் அல்ல என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து நான் எப்போதும் சக நடிகைகளுக்கும் மரியாதை கொடுப்பவன் த்ரிஷா குறித்து நான் பேசிய வீடியோவை தவறாக கட் செய்து காண்பித்துள்ளார்கள். உலகத்தில் எத்தனையோ வேலை இருக்கு போய் பொழப்ப பாருங்க என்று மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.

actress-trisha-gets-letter-from-thousand-lights-police-regarding-mansoor-ali-khan-issue

மேலும், இதனை அடுத்து மன்சூர் அலிகான் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜரான மன்சூர் அலிகானிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதன் பின்னர் மன்சூர் அலிகான் த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

actress-trisha-gets-letter-from-thousand-lights-police-regarding-mansoor-ali-khan-issue

அதற்கு த்ரிஷா தவறு செய்வது மனித இயல்பு மன்னிப்பதே புனிதம் என்று பதில் அளித்து இருந்தார். மேலும், சர்ச்சை கூறிய வகையில் பேசிய விவகாரம் தொடர்பாக த்ரிஷா தரப்பில் விளக்கம் கேட்டு ஆயிரம் விளக்கு மகளிர் காவல் துறை கடிதம் அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று நடிகை திரிஷாவுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

Share this post