மாலத்தீவில் ஒன்றாக சில்லிங் செய்யும் ராஷ்மிகா - விஜய்.. ஒரே கண்ணாடியால் சிக்கிய ஜோடி !
தனது முதல் படமான கன்னட மொழியில் வெளியான கிரீக் பார்ட்டி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ரஷ்மிகா மந்தனா. இப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் செம ஹிட் அடித்த நிலையில், ராஷ்மிகாவிற்கு முதல் படமே வெற்றி படமாக அமைந்து விட்டது.
அதனைத் தொடர்ந்து, கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் கமிட் ஆகி அடுத்தடுத்து நடிக்கத் தொடங்கினார். தெலுங்கு மொழியில் இவர் கதாநாயகியாக நடித்து வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் இவரை பேன் இந்திய லெவல் பேமஸ் செய்தது. அதில் வரும் பாடல்கள் இவரது நடிப்பு என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தது.
இதனால், வெகு சில படங்களிலேயே முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக மாறிவிட்டார் ராஷ்மிகா. தமிழில், சுல்தான் திரைப்படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமானார். புஷ்பா படத்தில் இவரது வித்தியாசமான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.
இந்தியில் அமிதாப் பச்சனுடன் குட் பாய், சித்தார்த் மல்கோத்ராவுடன் மிஷன் மஜ்னு, அனிமல், தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் புஷ்பா 2, தமிழில் விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்திலும் நடித்து வருகிறார்.
இவ்வாறு கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என படு பிசியாக இருக்கும் ராஷ்மிகாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் காதலிப்பதாக அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வதந்திகள் வெளியாகி வருகிறது. இரண்டு படங்களுக்கு பிறகு இருவரும் இணைந்து நடிக்கவில்லை என்றாலும் இருவரும் டேட்டிங் செல்வது, ஊர் சுற்றுவதுமாக இருந்தனர். ஆனால், நாங்கள் இருவரும் நண்பர்கள் தான், காதலர்கள் இல்லை என கூறி வருகின்றனர்.
இந்த ஜோடி தற்போது மாலத்தீவில் விடுமுறையை கொண்டாட சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. என்னத்தான் தனித்தனி காரில் வந்தாலும், மாலத்தீவு செல்லும் விமானத்தில் ஒன்றாகத்தான் ஏறியதால் கேமராவில் வசமாக சிக்கிக்கொண்டனர்.
இந்நிலையில் விஜய் தேவரகொண்டாவின் கூலர் கண்ணாடியை, ராஷ்மிகா மந்தனா போட்டுக்கொண்டு இருக்கும் போட்டோவை இன்ஸ்டாவில் ஷேர் செய்திருந்தார். இதைப்பார்த்த, ரசிகர்கள் மும்பை விமானநிலையத்திற்கு விஜய்தேவரகொண்டா கூலர் போட்டு வரும் போட்டோவையும், ராஷ்மிகா கூலர் போட்டு இருக்கும் போட்டோவையும் ஷேர் செய்து கண்ணாடி விஜய்க்கு சொந்தமானது என்பதை கண்டுபிடித்துவிட்டனர். மண்டையில் இருந்த கொண்டைய மறந்துடீங்களே என இருவரையும் கிண்டலடித்து வருகின்றனர்.