ராம் சேது Trailer: 'ஸ்ரீராமருக்கு 1000 கோயில்கள் இருக்கலாம், ஆனா சேது ஒண்ணு தான்' சர்ச்சையில் சிக்குமா ‘ராம் சேது’ !

ram setu trailer vidoe getting viral on social media

பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அக்‌ஷய் குமார். இவர் நடிப்பில் இந்த ஆண்டு ரிலீசான படங்கள் அனைத்தும் படு தோல்வியை சந்தித்தன. இதையடுத்து அவர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ராம் சேது. படப்பிடிப்பு முடிவடைந்து வரும் தீபாவளி அன்று உலகம் முழுவதும் தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியாக உள்ளது.

ram setu trailer vidoe getting viral on social media

இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரன் மேலும் மூன்று நிறுவனங்களுடன் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

ram setu trailer vidoe getting viral on social media

இலங்கைக்கும் தமிழகத்துக்கும் இடையே உள்ள ராமர் பாலம் என்று தமிழிலும் ஆடம் பிரிட்ஜ் என்று ஆங்கிலத்திலும் கூறப்படும் பாலம் இராமாயண புராண காலத்தில் இருந்தே புகழ்பெற்றது. இந்த பாலம் குறித்த உண்மைத் தன்மையை ஆராய செல்லும் ஒரு தொல் பொருள் ஆய்வாளரின் கதைதான் இந்த படத்தின் கதை என்று கூறப்படுகிறது.

ram setu trailer vidoe getting viral on social media

இதில் 7000 வருடத்திற்கு முன் ராமரால் கடலுக்கு நடுவே கட்டப்பட்டதாக கூறப்படும் ராமர் பாலத்தை பற்றி தான் இப்படத்தை எடுத்துள்ளனர். அந்த பாலத்தை தேடிச் செல்லும் அக்‌ஷய் குமார் அதில் வெற்றிகண்டாரா என்பது தான் இப்படத்தின் கதை. அபிஷேக் சர்மா இயக்கியுள்ள இப்படத்தில் அக்‌ஷய் குமாருக்கு ஜோடியாக ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடித்துள்ளார்.

ram setu trailer vidoe getting viral on social media

ராம் சேது திரைப்படம் தமிழில் ராமர் பாலம் என்கிற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. புராணம் சார்ந்த கதை திரைப்படங்களாக எடுக்கப்பட்டாலே எதாவது சர்ச்சை உருவாவது வழக்கம். இதனால் இப்படமும் ரிலீசான பின்னர் சர்ச்சைகளில் சிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Share this post