முகம் சுளிக்க வைக்கும் லிப்லாக்… இதுவரை இல்லாத அளவிற்கு சம்பளத்தை உயர்த்திய ராஷ்மிகா..!
ராஷ்மிகா மந்தனா தனது அடுத்த படமான அனிமல் மூலம் பாலிவுட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் ஹீரோவாக நடித்த இப்படம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சமீபத்தில், ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள “Ammayi” (தெலுங்கு பதிப்பின் பாடல்) பாடல் வெளியிடப்பட்டது, மேலும் இது சமூக ஊடகங்களில் விவாதத்தைத் ஏற்படுத்தியது. பாடலில் ரன்பீர் மற்றும் ராஷ்மிகா மந்தனா இடையே லிப் லாக் முத்த காட்சி இருந்தது குறித்து சமூக வலைதளங்களில் பேசும் பொருளானது.
இந்த லிப்லாக் காட்சிகளுக்கு ராஷ்மிகா மந்தனா கூடுதல் சம்பளம் கேட்டதாக சில தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ராஷ்மிகா மந்தனா முத்தத காட்சிக்கு கூடுதல் பணம் கேட்டதாகவும் தகவல்கள் வெளியானது. தற்போது பாலிவுட் ஹீரோ ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் படத்தில் நடிக்க ரூ 4 கோடி சம்பளம் வங்கியுள்ளாராம்.