இரத்தம் கொதிக்கிறது.. டார்ச்சர் கொடுக்கும் தயாரிப்பாளர்கள் குறித்து ரித்திகா சிங் ஓபன் டாக்..!
இறுதிச்சுற்று மற்றும் ஓ மை கடவுளே ஆகிய படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் ரித்திகா சிங். இவர் கடைசியாக கிங் ஆஃப் கோதா படத்தில் ஒரு சிறப்புப் பாடலில் நடனம் ஆடியிருந்தார். இந்நிலையில், தலைவர் 170 படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் முதல் முறையாக நடிக்க உள்ளார்.
ரித்திகா சிங் அவ்வப்போது இவரது கவர்ச்சி புகைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றி ரசிகர்களை சூடேற்றியும் வருகிறார். இந்நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது குறித்து கிக் பாக்ஸராக இருந்து வரும் நடிகை ரித்திகா சிங் இரத்தம் கொதிக்கிறது என பகிர்ந்துள்ளார்.
மேலும், ஒருவர் தங்களுடைய குழந்தைகளை வளர்க்கும் போதே, உலகத்தைப் பற்றி அவர்களுக்குத் தெரியப்படுத்துவதும் மற்றும் அவர்களுக்கு தற்காப்பு பாடங்களை வழங்குவது குறித்து தனது கருத்தினையும் தெரிவித்துள்ளார். பொதுவாக இந்த மாதிரி வேலை எல்லாம் தயாரிப்பாளர்கள் மற்றும் இளைஞர்கள் தான் அதிகப்படியாக செய்து வருவதாகவும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
இதில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களையும், பிரச்சனைகளை தடுக்க பெண்கள் அவசியம் தற்காப்பு கலையை கற்றுக் கொள்ள வேண்டும். பாலியல் தொந்தரவு செய்தால் அவரை திருப்பி தாக்க வேண்டும் என்று ரித்திகா சிங் தெரிவித்துள்ளார். மேலும், இதுபோன்ற எண்ணங்கள் அனைவரிடத்திலும் இருந்தால் மெல்ல மெல்ல சமூகத்தில் மாற்றம் நிகழும் என்றும் தெரிவித்துள்ளார்.