‘சந்திரமுகி 2’ ஷூட்டிங்கில் வடிவேலு கன்னத்தில் ஓங்கி குத்திய ராதிகா.. பதறிய லாரன்ஸ்.. வைரலாகும் வீடியோ !

Radhika and lawrence playing by punching vadivelu cheeks video getting viral on social media

2005ம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, நாசர், வடிவேலு, சோனு சூட், வினீத், மாளவிகா, கே.ஆர்.விஜயா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகிய காமெடி ஹாரர் திரைப்படம் சந்திரமுகி. இப்படம் மலையாள திரைப்படமான Manichitrathazhu படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.

Radhika and lawrence playing by punching vadivelu cheeks video getting viral on social media

சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். பாக்ஸ் ஆபிஸில் நல்ல கலெக்சனை பார்த்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் ஜோதிகாவின் நடிப்பு பயணத்தில் நல்ல மைல்கல்லை அமைத்து தந்தது.

Radhika and lawrence playing by punching vadivelu cheeks video getting viral on social media

இதன் தொடர்ச்சியாக, ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் 2ம் பக்கத்தில் நடிக்கவுள்ளார் எனவும், இயக்குனர் பி.வாசு இந்த படத்தின் ஷூட்டிங்கை விரைவில் தொடங்குவுள்ளார் என பல தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. இப்படத்தில் அனுஷ்கா நாயகியாக நடிக்கவுள்ளதாக கூறி சில போஸ்டர்களும் இணையத்தில் வைரல் ஆகியது.

Radhika and lawrence playing by punching vadivelu cheeks video getting viral on social media

இந்நிலையில் சந்திரமுகி 2வை தயாரிப்பதாக இருந்த சன் பிக்சர்ஸ் பின் வாங்கியதால் படப்பிடிப்பு துவங்கவில்லை, லைகாவுடன் ஒப்பந்தமான பி.வாசு தற்போது மீண்டும் திரைக்கதையை துவங்கியுள்ளார். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

Radhika and lawrence playing by punching vadivelu cheeks video getting viral on social media

சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் வேட்டையன் மன்னன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இதன், 2ம் பாகம் முழுக்க வேட்டையன் மன்னன், சந்திரமுகி இடையே நடக்கும் மோதல் தான் என்று கூறப்படுகிறது.

Radhika and lawrence playing by punching vadivelu cheeks video getting viral on social media

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமான சந்திரமுகி கதாபாத்திரத்தில் லட்சுமி மேனன் மற்றும் மஹிமா நம்பியார் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் மைசூரில் தொடங்கியது. இதனை முன்னிட்டு நடிகர் லாரன்ஸ் தனது குருவான நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

Radhika and lawrence playing by punching vadivelu cheeks video getting viral on social media

இதில் ராதிகா சரத்குமாரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக லட்சுமி மேனன், மகிமா நம்பியார் உள்பட 5 ஹீரோயின்கள் நடிக்கிறார்களாம். பாகுபலி பட இசையமைப்பாளர் மரகதமணி தான் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

Radhika and lawrence playing by punching vadivelu cheeks video getting viral on social media

சந்திரமுகி 2 படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் மைசூருவில் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், தற்போது அப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதையொட்டி ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் ராதிகா. அந்த வீடியோவில் நடிகர் வடிவேலுவின் கன்னத்தில் லாரன்ஸும், ராதிகாவும் குத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் வடிவேலு கொடுத்த எக்ஸ்பிரஷன் தான் அல்டிமேட். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

Share this post