Viral Video: 'ரஜினி மூஞ்ச போட்டாலே இழுக்குது.. இதுல ராஜலட்சுமி மூஞ்ச போட்டா'.. மேடையில் சர்ச்சையை கிளப்பிய ராதாரவி.
‘என்ன மச்சான், சொல்லு புள்ள’ பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ்– ராஜலக்ஷ்மி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக செந்தில் கணேஷ்– ராஜலக்ஷ்மி இருவரும் கலந்து கொண்டார்கள்.
மேலும், போட்டியில் செந்தில் கணேஷ் தன்னுடைய விடாமுயற்சியால் பைனலுக்கு சென்று வீட்டை தட்டிச் சென்றார். இந்த நிகழ்ச்சி இவர்கள் வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைந்தது என்று சொல்லலாம். தற்போது இந்த ஜோடிகள் திரை உலகில் பல பாடல்களை பாடி வருகிறார்கள். மேலும், செந்தில் சினிமாவில் ஹீரோவாக படம் ஒன்றில் நடித்து இருந்தார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு பெறவில்லை.
தற்போது இருவரும் இருளி என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். இந்நிலையில், ராஜலட்சுமி நாயகியாக களமிறங்கி வருகிறார். தற்போது ராஜலட்சுமி ‘Licence’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கணபதி பாலமுருகன் என்பவர் இயக்க இருக்கிறார். மேலும், இந்த படத்தில் நடிகர் ராதாரவியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.
இந்நிலையில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. மேலும், இந்த படத்தின் லான்ச் விழா நடைபெற்றது. இதில் இந்த படம் குறித்தும் ராஜலட்சுமி குறித்தும் பேசிய நடிகர் ராதாரவி “இந்த படத்தின் இயக்குனரை நிச்சயம் பாராட்டி தான் ஆக வேண்டும் என்று என் தயாரிப்பாளர் இடமே சொன்னேன் இவ்வளவு தைரியமாக இப்படி ஒரு கதையை எடுத்து இருக்கிறான். அதுவும் இந்த படத்திற்கு ராஜலட்சுமி நடிக்க வைத்திருக்கிறான் அதுதான் டாப்.
வேறு யாராக இருந்தாலும் வேறு யாரையாவது தான் தமிழ் செய்திருப்பார்கள். இந்த படத்தின் போஸ்டரை இங்கே ஓபன் செய்தார்கள். ராஜலட்சுமி போட்டோவை போட்டால் படம் வியாபாரம் ஆகிவிடுமா ? ரஜினி சார் மூஞ்சை போட்டாலே இழுக்குது ஆனால் ராஜலட்சுமி முகத்தை தைரியமாக போட்டு இருக்கிறார்கள் அதை நான் பாராட்டுகிறேன். இந்தக் கதைக்கு ஏற்ற ஒரு அற்புதமான கதாநாயகி குத்து விளக்கு ஏற்றிய போது கூட அவரது கணவரை அழைத்தது இது முதல் படம் அம்மா அடுத்த படத்திற்கெல்லாம் அவரை கூப்பிட்டுக் கொண்டு வருவாயா என்று பார் அடுத்த படத்திற்கு எல்லாம் கூட்டு வராதே தொல்லை. உன் கணவரை அழைத்து வந்தால் நீ பாதுகாப்பு என்று நினைக்கிறாய் ஆனால் நீ தான் உன்னுடைய பாதுகாப்பு” என்று கூறியுள்ளார்.