அண்ணாமலைக்கு முதலிடம்.. உதயநிதிக்கு இரண்டாவதா? ட்வீட்டினால் வம்பில் சிக்கிய ரஜினி

தமிழ் திரையுலகை பொருத்தவரை சிவாஜி மற்றும் எம்ஜிஆர் அவர்கள் வரிசையில் நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் வைத்திருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களையே. அவரது ஸ்டைல், பேச்சு, நற்குணம் என அனைத்திற்கும் ரசிகர் கூட்டம் என்ன படையே உள்ளது என்பது தான் உண்மை.
சூப்பர்ஸ்டாருக்கு நேற்று பிறந்தநாள் என்பதனால், ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவரை குறித்த பதிவுகள், புகைப்படங்கள், throwback வீடியோக்கள் என பதிவிட்டு கொண்டாடி வந்தனர். இவரது பிறந்தநாளுக்கு, அரசியல், சினிமா, விளையாட்டு என்று பல்வேறு துறைகளை சார்ந்த பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தார்கள். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் என்று பலரும் ரஜினியை வாழ்த்தினார்கள்.
பிறந்தநாள் அன்று தன்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் ரஜினி. மூன்று பகுதிகளாக இருக்கும் அந்த அறிக்கையின் முதல் பகுதியில் அரசியல் தலைவர்களுக்கும், இரண்டாம் பகுதியில் சினிமா துறையினருக்கும், மூன்றாம் பகுதியில் விளையாட்டு உள்ளிட்ட பிற துறையினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வம், அண்ணாமலை ஆகியோரின் பெயர்களுடன் அறிக்கை துவங்கியிருக்கிறது. அமைச்சராகவிருக்கும் உதயநிதி ஸ்டாலினின் பெயர் முதல் பகுதியில் இல்லை. இரண்டாவது பகுதியில் இருந்தது. அதை பார்த்தவர்களோ, அண்ணாமலைக்கு முதலிடம், உதய்’ணாவுக்கு இடமே இல்லையா என விமர்சித்துள்ளனர்.
தலைவர் யாரையும் பிரித்துப் பார்க்க விரும்பவில்லை. அவர் நன்றி தெரிவித்து வெளியிட்ட அறிக்கையை வைத்து அரசியல் செய்ய வேண்டாம். உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் அவரை தன் கலைக்குடும்பத்தில் ஒருவராக பார்க்கிறார் ரஜினி. அதனால் தான் தன் குடும்பத்தார் பெயர்களில் உதயநிதி ஸ்டாலினின் பெயரையும் சேர்த்திருக்கிறார். அதனால் ரஜினி உதய்ணாவை ஒதுக்கிவிட்டார் என்று பேச வேண்டாம் என கூறி வருகின்றனர்.
Thank you 🙏🏻 pic.twitter.com/7UHsqPc3oA
— Rajinikanth (@rajinikanth) December 12, 2022