குழந்தை விஷயத்தில் இப்டி ஒரு முடிவா? கணவரோடு சேரபோவதில்லையா? பிக்பாஸில் ரச்சிதா பேசியதை கேட்டு ஷாக்கான ரசிகர்கள்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை ரக்சிதா மஹாலக்ஷ்மி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற தென்னிந்திய அனைத்து மொழி சீரியல் தொடர்களிலும் நடித்துள்ளார்.
தமிழ் மொழியில், சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் என அனைத்து பிரபல சேனல்களிலும் நடித்துள்ளார். பிரிவோம் சந்திப்போம், இளவரசி, சரவணன் மீனாட்சி 2 & 3, நாச்சியார்புரம், நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.
தன்னுடன் சீரியல் தொடரில் இணைந்து நடித்த தினேஷ் என்பவரை காதலித்து கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கடந்த ஒரு ஆண்டாக கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. இவர்கள் இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்க இருதரப்பு குடும்பத்தினரும் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ரக்சிதா தற்போது ‘சொல்ல மறந்த கதை’ என்ற தொடரில் நடித்து வருகிறர். இந்த தொடரில் கணவனை இழந்து, இரு குழந்தைகளை வளர்க்க போராடும் தாய் கேரக்டரில் நடித்து வந்தார். சமீபகாலமாக சோசியல் மீடியாவில் செம ஆக்டிவாக இருக்கும் ரச்சிதா, விதவிதமான கிளாமர் உடைகளில் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார்.
தற்போது, பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். தற்போது பிக்பாஸில் விளையாடி வரும் ரச்சிதாவிற்கு ஆதரவாக தொடர்ந்து, தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார் தினேஷ். ஆனால், ரச்சிதா இதுவரை தனது கணவர் குறித்து பிக்பாஸில் ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் ரச்சிதா, விக்ரமனிடம் குழந்தையை தத்தெடுப்பது குறித்து பேசி இருக்கிறார்.
அதில் ‘”நான் என்னோட 35 வது வயதில் தான் ஒரு குழந்தையை தத்து எடுப்பேன் , 35 வயது என்ற அளவுகோல் ஏன் வைத்தேன் என்றால், அப்போது தான் இன்னும் நிறைய கற்று கொண்ட அனுபவம் கிடைக்கும் அதன் மூலம் ஒரு குழந்தையை வளர்க்க கூடிய நம்பிக்கை எனக்கு கிடைக்கும்” என்று கூறியுள்ளார். அதற்கு விக்ரமன் ‘ஆண் குழந்தையா பெண் குழந்தையா’ என்று கேட்க அதற்கு ரஷிதா ‘பெண் குழந்தை தான். எனக்கு பெண் குழந்தை ன ரொம்ப பிடிக்கும்.’ என்று கூறியுள்ளார். இதன் மூலம் ரச்சித்தா தனது கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழ வாய்ப்பு இல்லை என்பது போலவே தெரிகிறது.